praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Tuesday, December 8, 2009

சென்னையில் இப்படியும் ஒரு சபை..!

சென்னையில் இப்படியும் ஒரு சபை..! 
நண்பர்களே, அண்மையில் சென்னைத் துறைமுகத்தின் சுற்றுச் சுவரைச் சுற்றிலும் வாழும் குடிசைப்பகுதி மக்களிடையே ஊழியத்துக்காக சென்றிருந்தேன்; சத்யா நகர்  எனப்படும் அந்த பகுதி போர் நினைவு சின்னம் மற்றும் தீவுத் திடல் எதிரில் அமைந்துள்ளது;



அங்கு கடந்த ஆறு வருடங்களாக நடந்த ஊழியத்தின் பலனாக சுமார் 300 குடும்பங்கள் ஆதாயம் செய்யப்பட்டது; அவர்களை உற்சாகப்படுத்த வாரா வாரம் ஆராதனைக்குப் பிறகு உணவு, வருடாந்தர கிறிஸ்மஸ் மற்றும் குழந்தைகள் (VBS) நிகழ்ச்சிகளின் போது பரிசுப் பொருட்கள், விருந்து என கடன் வாங்கி அந்த ஊழியர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்;

இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் சேர்ந்து போராடி துறைமுகத்தின் சுவர் ஓரமாக குப்பை கொட்டி வந்த பாழான இடத்தை சபை கட்டிக்கொள்ள இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள்; அதில் ஊழியர் மிகவும் சிரமப்பட்டு சுமார் 300 பேர் அமர்ந்து ஆராதிக்கக் கூடிய ஆராதனை ஸ்தலத்தைக் கட்டியுள்ளார்; அதற்காக அந்த ஊர் தலைவர் மனைவியிடம் ரூபாய்.50,000/@15%வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்; அதற்கு ஒரே முறை வட்டி பாக்கியாக ரூபாய்.20,000/ செலுத்திய பிறகு அசல் பணத்தைக் கொடுத்து தீர்க்கமுடியாததால் சபையை பூட்டிவிட்டனர்;



ஊழியரோ வேறு பல கடன்களும் சேர ஊரைவிட்டும் வீட்டைவிட்டும் எங்கோ போய்விட்டார்; இந்த நிலையில் சபைக்கும் பூட்டு போடப்பட்டு விட்டதால் மக்கள் ஆராதிக்கமுடியாமல் கடந்த ஆறு மாதங்களாக தவித்துபோயினர்; கடன்கொடுத்தவர்கள் மனமிரங்கி மீண்டும் கெடு வைத்து சாவியைக் கொடுத்துள்ளனர்;


தற்போது பேசி முடிக்கப்பட்ட மிகக் குறைந்த கால அவகாசத்தில்-வட்டியும் முதலாக செலுத்தித் தீர வேண்டிய பணம் ரூபாய்.80,000/- இதுவும் சுமார் 1.45 லட்சத்திலிருந்து இறங்கி வந்த தொகையாகும்; அதாவது ரூபாய்.50,000/@15%வட்டிக்கு சுமார் மூன்று வருட வட்டியுடன் கூடிய கடன் தொகையாகும்;

இதை வாசிக்கும் நண்பர்கள் விரும்பினால் ஊழியரின் மனைவியான சகோதரி சௌந்தர மேரி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆறுதலும் தைரியமும் இயன்ற உதவிகளும் செய்ய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன்; 


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..!


தொடர்புக்கு: 9600102476


2 comments:

Rajkumar said...

அன்பு ச‌கோதரே உங்கள் பதிவுகளை தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் ரசித்திருக்கிறேன்,


உங்களிடம் அனேக தாலந்துகள் ஆண்டவர் கொடுத்திருக்கிறார், ஆனால் (தயவு செய்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்) தாங்கள் விவாதங்களில் அவற்றை செலவிடுகிறீர்களோ என்பது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து, தவறுகள் இருந்தால் என்னை மன்னியுங்கள்,

ஆண்டவர் உங்களுக்கு க‌ற்றுக் கொடுத்திருக்கும் காரியங்களை தாங்கள் கட்டுரைகளாக உங்கள பிளாக்கரிலும், மற்ற தமிழ் கிறிஸ்தவ‌ர்கள் போன்ற தளங்களிலும் வெளியிடுவீர்களாயின், அது புறஜாதியார்களின் மத்தியில் அதிகமாக விழிப்புணர்வை உருவாக்கும் என்பது என்னுடைய தாழமையான கருத்து,


மேலும் உங்களுடைய பதிவுகள் திரட்டிகள் மூலமாக ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படித்து பயனடைய வைக்க முடியும், உங்கள் பிளாக்கரை எல்லா தமிழ் திரட்டியிலும் பதிவு செய்யுங்கள், மற்றும் ஓட்டளைப்பு பட்டையை நிறுவுங்கள், இதன் மூலம் அனேகர் உங்கள் பிளாக்கருக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க முடியும்,

தள வரைவு பற்றிக் கேட்டிருந்தீர்கள், http://blogtemplate4u.com/ இந்த தொடுப்பில் சென்று உங்களுக்கு பிடித்த வரைவை தேர்வு செய்து பதிவிரக்கம் செய்யுங்கள், பின்பு அந்த Zip File-ஐ
right clik செய்து exract All என்பதைக் கிளிக் செய்யுங்கள், அப்போது (html) பூமி உருண்டை போன்ற சின்னமுடைய ஒரு file இருக்கும் அதை right கிளிக் செய்து open with, word pad அல்லது நோட் பேட் எனக் கொடுத்தால் உங்களுக்கு html நிரலிகள் கிடைக்கும்,


அதை உங்கள பிளாக்கர் டேஷ் போரிடில் edit html பகுதியில் Expand Widget Templates ஐ கிளிக் செய்து நிரலியை replace செய்யுங்கள் இப்போது உங்கள் பிளாக்கர் நீங்கள் விரும்பிய வடிவில் இருக்கும்,


பின் குறிப்பு உங்கள் side bar, widget டை தயவு செய்து சேவ் செய்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் பழைய widget அழிந்து விடும்,


தமிழ் மற்றும் கூகுல் தேடுதல் பொறியில் உங்கள் பிளாக்கர் பதிவுகள் அதிகமாகக் கிடைக்கப் பெற: என்னுடைய பிளாக்கரில் உள்ள திரட்டிகள் மற்றும் என்னுடைய பிளாக்கரில் கீழ் பகுதியில் உள்ள பிளாக்கர் directory களிலும் உங்கள பிளாக்கரைப் பதிவு செய்து கொள்ளுங்கள்

மேலும் விவரங்களுக்கு என்னுடைய மின்னஞ்சல்:

Eloi4u@gmail.com

அலைபேசி எண்: 9344005500 ( call any time)

Rajkumar said...

என்னுடைய பிளாக்கர் வரைவு:http://blogtemplate4u.com/2009/04/magazine-template-r14.html இந்த தொடுப்பில் உள்ள வரைவு ஆகும், இதை நான் எடிட் செய்து பயன் படுத்தியிருக்கிறேன்

Post a Comment