தமிழகஅரசு அண்மையில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் ஆணையொன்றை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பித்தது;இந்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் திடீரென அவசர கோலத்தில் இந்த ஆணையைப் பிறப்பித்ததால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தனியார் பள்ளிகள் தடுமாறிப் போயின;
நீதிபதி அவர்களின் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன;உதாரணமாக இந்த அரசின் உத்தரவை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தினாலும் அந்த கட்டணத்தைக் கட்டப்போவதென்னவோ பெற்றோர் தான்;அவர்களிடமும் விசாரணை ஆலோசனை கேட்டிருக்கவேண்டும் என்பது பெற்றோரின் ஆதங்கம்;பள்ளி நிர்வாகமும் தனது நியாயமான செலவினங்களுக்கு மாற்று உதவிகளை அரசிடம் கோருகிறது;
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே கல்வித் தொகையினை வசூலித்து பாடப்புத்தகங்களை வழங்கவேண்டிய நிலையிலிருந்த பள்ளி நிர்வாகம் நிலைமையை சமாளிக்க என்ன செய்தது? ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாஸிட் போல பெற்றோரைக் கட்ட வற்புறுத்தியது;அடுத்து பள்ளி திறந்ததும் மேலும் இன்னொரு தொகையை பள்ளிக்கட்டணம் மற்றும் நோட்டுப் புத்தகத்துக்கென மொத்தமாக வசூலித்துக் கொண்டு அதற்கு குறைவாக பில் கொடுத்தது;சரி,பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என பொறுத்துக் கொண்டு நிர்வாகம் சொன்னதையெல்லாம் பெற்றோர் செய்தனர்;அதற்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா,அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறோம்,அந்த உத்தரவு வந்ததும் மீதப் பணத்துக்கான பில் தரப்படும் என்றனர்;
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=939&cat=32
இதனிடையே இது தொடர்பாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது;அரசாங்கம் மௌனம் சாதித்தது;அது தனது சட்டத்தை அமல்படுத்தும் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கவோ செயல்படுத்தவோ இல்லை;பாவம்,நீதிபதி கோவிந்தராஜனும் பள்ளிகளுக்கு ஊர்வலமாகச் சென்று சட்டம் அமல்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்து மீண்டும் ஒரு அறிக்கை தந்தார்;அதில் ஒரு சில பள்ளிகளின் முறைகேட்டைக் கண்டுபிடித்ததுடன்(..?!)அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் பரிந்துரைத்தார்;இப்போதும் அரசு மௌனம் சாதித்தது;அந்த பள்ளிகள் செய்தது சரி என்றும் சொல்லவில்லை,அங்கீகாரத்தை ரத்து செய்யவுமில்லை;பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டது.
இவையெல்லாவற்றுக்குமிடையே பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் சிக்கிக் கொண்டனர்; பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்குமிடையே ஏற்படும் மனக் கசப்பு மாணவர்களின் கல்வியையும் அவர்தம் எதிர்காலத்தையும் பாதிக்காதா? இதை சற்றும் உணராது அரசாங்கம் தான் அவசரகோலத்தில் பிறப்பித்த சட்டத்தை திரும்பப் பெறவும் முடியாமல் செயல்படுத்தவும் முடியாமல் 'ச்சும்மா' இருந்தால் தானாகவே எல்லாம் சரியாகிவிடுமென்ற "நரசிம்மராவ்" பாணியைக் கடைபிடித்து வருகிறது;
இந்த சூழ்நிலையினை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் சில சந்தர்ப்பவாதிகளான இந்து அடிப்படைவாதிகள் பெற்றோரைத் தூண்டிவிட்டு கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கெதிராக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்;இதனை அன்றாடம் செய்திகளை கவனித்து வருவோர் நன்கு அறிவர்;
ஆம்,இதுவரை டிவியிலும் செய்தித் தாள்களிலும் அடிபட்ட பள்ளிகளெல்லாம் கிறித்தவ பள்ளிகளாகவே இருக்கும் இரகசியமென்ன?இதில் சில இஸ்லாமிய நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிகளும் அடக்கம்;
இதனால் இந்த போராட்டக்காரர்கள் சாதிக்கப்போவதென்ன? சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அரசிடம் முறையிடாமல் பள்ளி நிர்வாகத்தை நோக்கி படையெடுத்தால் என்ன பயன் நேரும்?
ஏற்கனவே மாணவர் ஆசிரியர் இடையிலான புனிதமான உறவு கெட்டு வருகிறது;இந்த நிலையில் நிர்வாகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாக பெற்றோர் செயல்பட்டால் வளரும் இளம்தலைமுறையினரின் மனநலன் பாதிக்காதா?
அதிலும் சேவை ஒன்றையொன்றே பிரதானமாகக் கொண்டு செயல்படும் கிறித்தவ பள்ளிகள் ஏதோ முறைகேடு செய்ததைப் போலப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்தால் கிறித்தவ பள்ளிகளின் நேர்மையும் இங்கே கேள்வி குறியாகிறது;நாம் அறிந்தவரையில் அதிகக் கட்டணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது;அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை என்பதே உண்மை நிலவரமாகும்;அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்;அவை ஆராய்ந்து களையப்படவேண்டும்;இன்னும் வழக்கமாக வருடாவருடம் உயர்த்தும் கட்டணத்தைக் கூட இந்த வருடம் உயர்த்த வழியில்லாமல் பள்ளிகள் தவித்துப் போனது என்பதே உண்மை நிலை;காரியம் இப்படியிருக்க கிறித்தவ பள்ளிகள் மட்டுமே ஏதோ மோசடியில் ஈடுபடுவதைப் போல சன்டிவி போன்ற மீடியாக்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைப் போலவே தோன்றுகிறது;
இதில் இன்னொரு கொடுமையென்றவென்றால் போராட்டக்காரர்கள்
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கொடுப்பதாம்;அவர்களும் வந்து செய்தியை சேகரித்துக்கொண்டு பள்ளிநிர்வாகத்திடம் பேரம் பேசுவதாம்;இந்த செய்தியை வெளியிடாமலிருக்க எவ்வளவு தருகிறீர்கள்' என்று:அந்த அளவுக்கு பத்திரிகையாளர்களுக்கு தேசபக்தியும் மக்கள் நலனும் பொங்கிவழிகிறது;
தமிழக அரசு உடனே இப்பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்தாகவேண்டும்;மீடியாக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்க இந்த சூழ்நிலையினைப் பயன்படுத்தாமலும் மத உணர்வுகளுடன் செயல்படாமலுமிருக்க வேண்டும்;பெற்றோரும் தங்கள் நியாயமான உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மெய்யாகவே பள்ளி நிர்வாகத்தினர் அதிகக் கட்டணம் வசூலிப்பது போலிருந்தால் அரசிடமோ கோர்ட்டிலோ முறையிடலாம்; அதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியைக் காட்டாதிருக்கவேண்டும்;இத்தனை வருடம் அமைதியாக இருந்த நீங்கள் அரசின் ஒரு தவறான சட்டத்தினால் உண்டான குழப்பத்தை உணராமல் கல்வி நிறுவனங்கள் மீது உங்கள் கோபத்தைக் காட்டுவது சரியல்ல.
2 comments:
தயவு செய்து video bar youtube widget-ஐ எடுத்துவிடுங்கள்.
ஏன் என்பதை நான் அறியலாமா நண்பரே?ஏதேனும் ஆபாச தொடுப்புகள் கலந்து வருகிறதா அல்லது சட்டரீதியான காரியங்களா என்பதைச் சொல்லவும்; மேலும் இணைய காப்பிரைட் சட்டங்கள் பற்றியும் சற்று அறிய விரும்புகிறேன்;உதாரணமாக மேலே தரப்பட்டுள்ள செய்தியின் தொடுப்பு சரியா என்று தெரியவில்லை; தங்கள் அனுபவத்திலிருந்து கூறவும்.
Post a Comment