praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, September 15, 2010

பள்ளிகளுக்கு கோவிந்தராஜன் குழு விதித்த கட்டணத்துக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை:
தனியார் பள்ளிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரையடுத்து கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து தனியார் பள்ளிகளின் வசதிகளை அடிப்படையாகக்கொண்டு பள்ளிகள் மாணவர்களிடம் வசூல் செய்துகொள்ள வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை வசூல் செய்யாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்தால் தரமான கல்வி அளிக்க முடியாது என்றும், கட்டணத்தை உயர்த்தக்கோரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கோவிந்தராஜன் குழுவிடம் மேல் முறையீடு செய்தன. இந்நிலையில் இந்த ஆண்டு குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரணை செய்த நீதிபதி வாசுகி தமிழக அரசு நியமித்த கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை நடப்பாண்டு வசூல் செய்துகொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனால் நடப்பு ஆண்டு ஏற்கனவே பள்ளிகள் என்ன கட்டணம் வசூல் செய்து கொண்டிருந்ததோ அதே கட்டணத்தை மாணவர்களிடம் வசூல் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.  

http://www.thenaali.com/newsinner.php?id=1347 


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84636

No comments:

Post a Comment