praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Friday, September 17, 2010

இறைவன் இயேசுவின் பூஜாரியா பால் தினகரன்? - Yauwana Janam

இறைவன் இயேசுவின் பூஜாரியா பால் தினகரன்? - Yauwana Janam

4 comments:

Anonymous said...

இத்தனை சொல்கிற நீங்களே உங்கள் வலைமலரிலும் பல விவாதமேடையிலும் இயேசுவின் படத்தை பற்பல விதத்தில் பயன்படுத்தியுள்ளீர்களே, அது தவறென தற்போது உணர்ந்துள்ளீர்களா?

உங்களைப் போன்ற பலர் இயேசுவின் படத்தைப் பயன்படுத்தியுள்ளதைப் போலவே, பால் தினகரனும் செய்துள்ளார். இதில் அவரை விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதலில் உங்கள் தவறை உணருங்கள்.

உங்களைப் போன்ற பலர் இயேசுவின் படத்தை பயன்படுத்தி வருவதால்தான், அது ஒரு விக்கிரகமாக மாறி வருகிறது. நீங்களெல்லாம் ஏன்தான் இயேசுவின் படத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது தெரியவில்லை.

முதலில் உங்கள் அறிவீனத்தை உணருங்கள்; அதன்பின் பால் தினகரனை விமர்சியுங்கள்.

chillsam said...

அன்புக்குரிய அனானி அவர்களே,தளத்திற்கு வந்து பார்வையிட்டு தங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி;

நான் இயேசுவின் படத்தைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ளுகிறேன்;இந்த கட்டுரையை வரையும்போதே அந்த எண்ணம் எனக்கு உருத்தலாகவே இருந்தது;

ஆனாலும் கிறித்தவ சமுதாயத்தின் அடையாளமாக
முன்னணியில் இருப்போர் எதை செய்கிறார்களோ அது அநேகரைப் பாதிக்குமல்லவா?

கீழ்க்கண்ட விவாதத்தைப் பாருங்கள்,இந்த பின்னூட்டங்களுக்கும் எனது கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை;எனவே நம்மை குறைக் சொன்னவருக்கு எனது கட்டுரையின் தொடுப்பைக் கொடுத்திருக்கிறேன்;

SATHESH, on September 15, 2010 at 22:31 Said:

உயர்திரு திருச்சி ஐயா, அவர்கள் இஷ்டம் விக்ரக வழிபாட்டினருடன் உணவு உண்ணாமல் இருந்துவிட்டு போகட்டும். அவர்களிலேயே வேளங்கன்னியில் அன்னை புனித மரியாளை வணங்குபவர் இருக்கிறார்கள் அவர்களுடனும் இவர்கள் கலந்திருக்க மாட்டார்களா? பெண்டகோஷ்ச்டேல் சபையிலும் சிலர் சிலுவையை (சிலுவை என்ற விக்ரகத்தை) அதன் மேல் பட்டு துணி சாற்றி வணங்குகிறார்கள்.

முழு அருவ வழிபாடு இந்து மதத்திலும் ஒரு அங்கம் அதை பயில்பவர் எவரும் உருவ வழிபாட்டினரை விட்டு விலகி வழ வேண்டும் என்று சட்டம் போட்டதோ, உதாசீனப் படுத்தியதோ வரலாறு இல்லை.

சுட்ட பின் சட்டுவமும்,சட்டியும் வேண்டாம் அனால் சுடும் வரை வேண்டும் என்று உள்ளவரும் மற்றவரை தாழ்வென்று சொன்னதில்லை.

சாகும் வரை உருவ வழிபாட்டிலே மூழ்கியவர்களும் பிறவற்றை தாழ்வென்று கூறவில்லை.

கிறித்தவ இந்து சண்டை,இந்து முஸ்லிம் சண்டை,இந்துக்களுக்குள் சண்டை,முஸ்லிம்களுக்குள் சண்டை,க்ரித்தவர்களுக்குள் சண்டை என்று கேட்டும் படித்தும் இருக்கிறோம் ஆனால் பார்ப்பனருக்கும் பிறருக்கும் சண்டை என்று கேட்டோ,படித்தோ இல்லை.அப்படி எதாவது இருந்தால் தெரியப் படுத்துங்கள். (நான் கேட்பது அடி உதை, வெட்டு குத்து ரேஞ்சுக்கு )

http://thiruchchikkaaran.wordpress.com/2010/09/14/religious-chuanism/#comment-1911

chillsam, on September 17, 2010 at 22:31 Said:

// பெண்டகோஷ்ச்டேல் சபையிலும் சிலர் சிலுவையை (சிலுவை என்ற விக்ரகத்தை) அதன் மேல் பட்டு துணி சாற்றி வணங்குகிறார்கள். //

சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன்,சதீஷ்;நாங்கள் வேதத்தைக் கடைபிடிக்கிறதில்லை என்பதே உண்மை.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38278602

அன்றன்றுள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத் தாரும் என இறைவனை மன்றாடும் நிலையிலிருக்கும் என் போன்றோர் இவ்வளவு தான் செய்யமுடியும்,”கற்க கசடற‌..!”



சீனு, on September 17, 2010 at 22:31 Said:

chillsam,

உங்களின் அந்த தளத்தில் இயேசுவின் உருவம் எப்படி இருக்கவேண்டும் என்ற வாதம். ஆனால், இயேசுவின் உருவம் இப்படி இருக்காது என்று சில வருடங்கள் முன்பு படித்திருக்கிறேன். அதேபோல, அவர் உருவம் எப்படி ‘இருந்திருக்கவேண்டும்’ என்று ஒரு மாதிரி உருவமும் போட்டிருந்தார்கள்.

இத நான் சொல்லலைங்க. சொன்னதும் உங்க ஆளுங்க தான்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இதன்படி நாம் சீர்திருத்தக் காலத்தைக் கடந்துவிடவில்லை என்பதை முந்தி அறியவும்; தாங்கள் குறிப்பிடுவதுபோல நான் அறிவீனமாக இருந்தால் அங்கே பால் தினகரன் அமைத்துள்ளது போல ஒரு தியான மண்டபத்தை அமைத்து அங்கே இயேசுவை சித்தரிக்கும் ஏதோ ஒரு படத்தை அமைத்து அதன் முன்பு அமர்ந்து வழிபடுவேன்;ஆனால் நானோ ஏன் பால் தினகரனோ கூட அதுபோல செய்கிறதில்லை;

ஆனால் விக்கிரகங்களையே பார்த்து பூஜித்து பழக்கப்பட்டுவிட்ட மக்களைத் திருப்திபடுத்த இதுபோன்ற சமரசங்கள் தேவைப்படுகிறது;இதுவே பால் தினகரன் தரப்பின் விளக்கமாக இருக்கும்; ஏனெனில் உருவ வழிபாடு என்பது பைபிளில் நேரடியாகவே கண்டிக்கப்படுகிறது எனபதில் சந்தேகமில்லை;

என்னைப் போன்றோர் இயேசுவை சித்தரிக்கும் படங்களை ஒரு அடையாளக் குறியீடு போலவே பாவிக்கிறோம்;உதாரணத்துக்கு சாலைவிதிகளைச் சித்தரிக்க அங்காங்கு சைகை குறியீடுகளை (Traffic Signals)அமைத்துள்ளதைப் போலவும் ஒரு கதையை சித்திரத்தின் மூலம் (Cartoon) விளக்குவது போலவும் மட்டுமே பாவிக்கிறோம்; இதற்கும் கூட நம்முடைய சபையானது கடந்துவந்த பாதைகளே காரணம்;கத்தோலிக்கத்தின் பாதிப்பு இல்லாமல் நம்மால் கிறித்தவத்தைக் கொண்டு செல்லமுடியாததாலேயே இந்த குறைபாடு நிலவுகிறது;பால் தினகரனும் கூட கத்தோலிக்கர்களையும் இன்னபிற உருவ வழிபாட்டாளர்களையும் கவருவதற்காகவே இதுபோன்ற சித்திரங்களைப் பயன்படுத்துகிறார்;

சபைகள் சிதைக்கப்படக் காரணமே இதுபோன்ற சுயநல கோடீஸ்வரர்களும் ஆதிக்கவெறி பிடித்த அரசாங்கங்களும் தானே தவிர என்னைப் போன்ற வழிப்போக்கர்களாலல்ல என்பதை முந்தி அறியவும்.

chillsam said...

இந்த பின்னூட்டத்தை எனது தளத்தில் காண கீழே சொடுக்கவும்.
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38278602

Anonymous said...

//ஆனாலும் கிறித்தவ சமுதாயத்தின் அடையாளமாக
முன்னணியில் இருப்போர் எதை செய்கிறார்களோ அது அநேகரைப் பாதிக்குமல்லவா?//

முன்னணியில் உள்ளவரைப் பார்த்து அநேகர் பாதிப்படைவது மட்டும் இடறல் அல்ல, சாதாரணமானவர்களாகிய நம்மைப் பார்த்து ஒருவர் பாதிப்படைந்தால்கூட அதுவும் ஓர் இடறல்தான்.

1 கொரி. 8:10-14-ஐ படித்துப் பாருங்கள். சகோதரன் இடறுவதற்கேதுவான போஜனத்தைக்கூட தவிர்க்கும்படி பவுல் கூறுகிறார்.

நீங்கள் இயேசுவின் படத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்து ஒருவர் இடறலுற்றாலும் நீங்கள்தான் அதற்குப் பொறுப்பாகும்.

எனவே முன்னணியில் உள்ளவர்/இல்லாதவர் என்ற வேறுபாடு பாரட்டாமல், நீங்கள் உங்களை முதலாவது திருத்துங்கள்.

இன்று முன்னணியிலுள்ள பலர் (சகோ.சாம் ஜெபத்துரையைத் தவிர) இயேசுவின் படத்தை தாராளமாகப் பயன்படுத்துகின்றனர். பாளையங்கோட்டையில் துதியின் கோட்டை கூட்டத்தார், இயேசுவின் படத்தைப் போட்டு, அருகில் ‘இயேசுவை ஆராதிக்க வாருங்கள்’ என அழைப்பு விடுத்துள்ளனர். இதையெல்லாம் யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

இம்மாதிரியான கிறிஸ்தவ உலகில், பால் தினகரனின் செயல் ஒன்றும் அத்தனை பெரியதுமல்ல, ஆச்சரியமானதுமல்ல.

இவ்விஷயத்தில் இப்போதாவது கண்விழித்து செயலில் இறங்கிய உங்களை நான் பாராட்டுகிறேன்.

Post a Comment