praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Sunday, March 14, 2010

பெரியார்தாச‌ன் இஸ்லாத்தை த‌ழுவிய‌து ப‌குத்த‌றிவுக்கு பின்ன‌டைவா? முன்னேற்ற‌மா?


திருச்சிக்காரன் தளத்தில் எழுதிய பின்னூட்டம்...

பெரியார்தாசன் கருத்து வியாபாரி என்பது ஊரறிந்த விஷயம்;ஆனால் பகுத்தறிவு குறித்து வகுப்பு எடுக்கும் உங்கள் நிலை என்ன என்பதை யோசித்துப் பார்த்தீர்களா?

நீங்கள் சரியாக நிரூபிக்கமுடியாத விடயங்களுக்கு வக்காலத்து வாங்கியது இல்லையா?

நான் இந்து மார்க்கத்தின் சடங்குகள் முழுவதும் மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களே..!

பகுத்தறிவுக்கு ஒத்துவராத காரியங்களையும்கூட சகித்துக்கொண்டுப் போகச் சொல்லுவதும்கூட ஒருவகை மோசடிதானே?

//(இங்கே நாம் உட‌ல் இற‌ந்த‌ பின் உயிர் த‌னியாக‌ வாழ்கிற‌து என்று அடித்து சொல்ல‌வில்லை. இது ஆராய‌ப் ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்றுதான்  சொல்கிறோம்.)//

தான் நிர்ணயித்துக் கொண்ட காரியத்தில் உறுதியுடன் நிற்பதே விசுவாசம் என்று விசுவாசக் கொள்கையானது உரைக்கிறது;
ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டியதென்ன,காணாததை நம்பினோமாகில் அதிக அகமகிழ்வு கொண்டவராக இருக்கமுடியும் என்றும் ஆலோசனை கூறுகிறது;
உயிர் எங்கே இருக்கிறது என்ற (உணர்வே இல்லாமல்) ஆராய்ச்சியிலேயே உயிரை விட்டவர்கள் நம்பிக்கையில்லாத கல்லறையை நோக்கி பயணிக்கிறதைக் குறித்த அக்கறையில்லாத ஞானிகளால் சமூகத்துக்குப் பயன் தான் என்ன?

இன்னும் மறுபிறவிக் கொள்கையை (பௌத்தமும்) நம்பும் ஞானத்தைக் குறித்து எப்போது முடிவுசெய்வது?

தனிப்பட்ட ஒருவனால் தன்னைக் குறித்து யோசிக்கும் மிகக் குறைந்த வாய்ப்பில் எத்தனைக் கொள்கைகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரமுடியும்?

அல்லது சுயத் தேடல் இல்லாமல் மிருகம் போலவும் அல்ல,
மனம் போனபோக்கில் வாழ்ந்து மறைந்தபிறகு ஒரு புதிய உலகில் நுழைய நேரிட்டால் அந்த போரை தனியொருவனால் எப்படி எதிர்கொள்ளமுடியும்?

அந்த உலகில் பெற்றோரும் உற்றோரும் நண்பர்களும் உடன் இருப்பதில்லையே..!

நீங்களே இன்னும் முடிவு செய்துக் கொள்ளாத விஷயங்களை கொள்கைபோலப் பேசுவது மட்டும் நேர்மையா?

அதைக் கொண்டு உங்கள் ஆன்மா எப்படி ஈடேறும்? 

ஒருநிலைபடுத்துதல்,மனக் குவிப்பு போன்று சுய முயற்சிகள் மூலம் ஒரு தனிமனிதன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சித்தால் அதற்கு அதிகம் உதவிசெய்யக்கூடியது இஸ்லாம் என்பதில் எந்த ஐயமுமில்லை;

உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களிலும் அறிவுபூர்வமான சுயாதீன சுத்ந்தர வாழ்வுக்கு உறுதியளிக்கும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது;தன் கடைசிகாலத்தில் தன்னை நம்பியுள்ளோருக்கு "நல்ல பலன்" தரக்கூடிய ஒரு முடிவை பெரியார்தாசன் எடுத்தால் என்ன தவறு?‌

1 comment:

bala said...

அய்யா தயவு செய்து பெரியார்தாசன் தாடி வைத்துக் கொண்டு,குல்லா போட்டுக் கொண்டிருக்கும் கண்கொள்ளாக் காட்சியை ஃபோட்டோ எடுத்து போடவும்.கடும் விலை வாசி உயர்வில் நொந்து நூலாய்ப் போயிருக்கும் எம் மக்கள் வேதனையை மறந்து சிரித்து மகிழ அந்த ஃபோட்டோ உதவினால் நாட்டுக்கு நன்மை தானே?இஸ்லாமே, மக்கள் மனம் மகிழ வந்திருக்கும் ஒரே மார்க்கம் என்று மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிடுவார்களே.

Post a Comment