இராப்போஜனம்..? - Yauwana Janam
கர்த்தருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதலை நினைவுகூறும் காலங்களில் இருக்கிறோம்;
இந்த நேரத்தில் அபஸ்வரம் போல சிலருடைய துருபதேசங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது சுயாதீனத்தை ஐயத்துக்குள்ளாக்குவதைப் போல ஒலித்துக்கொண்டிருக்கிறது;
இது வழக்கம்போல வருடாவருடம் நாம் சந்திக்கும் சர்ச்சைதான்; இதற்கு இதுவரை கண்டுக்கொள்ளாமல் கடந்துப்போகும் வழிமுறையினையே கடைபிடித்துவருகிறோம்;
ஆனாலும் இதற்கு சரியானதொரு பதில் இருக்குமல்லவா? அதனை தெரிவித்தால் அநேக அப்பாவி ஆத்துமாக்கள் சூதான போதகங்களால் வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்கலாமே!
கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனமே முதலாவது சர்ச்சை; அது மிகவும் முக்கியமானதாக கட்டளையாகவும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது;
அது அத்தனை முக்கியமானதாக இருந்தால் ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு நேரத்திலும் காலத்திலும் முறையிலும் அதனை ஆசரிப்பது ஏன்?
இதைக் குறித்த எனது பொதுவான அபிப்ராயத்தினை எனது தளத்தில் பதித்துள்ளேன்;அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ எழும்பக்கூடிய கருத்துக்களை தளநண்பர்கள் பகிர்ந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..!
No comments:
Post a Comment