யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
மேற்கண்ட வசனத்தின் படி இயேசுவானவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறியது போலவே அதன் மற்றொரு (குற்றச்சாட்டான) பகுதியான தேவனுக்குத் தம்மைச் சமமாக்கி தேவதூஷணம் செய்தார் என்றும் கூறமுடியும்;
இது பரிசேயர் பார்வையிலான சுவிசேஷகனின் கூற்று மற்றும் இயேசுவானவர் சாதாரண மனிதன் என்று கொள்வோமானால் இந்த வசனம் மிகச் சரியானதாக இருக்கும்;
ஆனால் அவர் மனிதன் மட்டுமல்ல தேவன் என்று நிரூபிக்க யோவான் சுவிசேஷ ஆக்கியோன் அவசரப்படாமல் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் கொண்டே வருகிறார்;
எனவே வசனங்களை "பிக்"(Pick) பண்ணி அவசர முடிவுக்கு வந்து கொள்கைகளை அறிவிக்காமல் அதன் முழுபொருள் அல்லது "காண்டெக்ஸ்ட்"(Context) எனப்படும் சூழமைவைக் கொண்டு முடிவுக்கு வரலாம்;
இதுபோலவே இயேசு தேவன் அல்ல,தேவகுமாரன் என்றும் அவர் தேவகுமாரன் கூட அல்ல,பிரதான தூதன் மிகாவேலின் அவதாரம் என்றும் பயங்கரமான போதகங்கள் பரவிக் கிடக்கிறது;
சுவிசேஷத்தின் இறுதிவரை வாசித்தே முடிவுக்கு வரமுடியும்;உதாரணமாக ஒரு கடிதத்தை வாசித்து முடித்தபிறகே அதன் முழுசெய்தியையும் அறிகிறோம்;கால்வாசி, அரைவாசி வாசித்துவிட்டு முழுவதும் வாசித்தறிந்த திருப்தியினைப் பெறுவோமா?
அதுபோலவே எந்தவொரு வேதப் பகுதியையுமே "ப்ரேக்"(Break) பண்ணாமல் முழுவதுமாக வாசித்தபிறகே போதனைகளை உருவாக்கவேண்டும்.
=>(தொடர்ந்து வாசிக்க...)
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36025391
2 comments:
சகோதரர் chillsam அவர்களுக்கு
உங்களை வலை பதிவிற்கு வந்ததிற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்,உங்கள் முயற்சி மென்மேலும் வளர்ச்சி அடைய நான் நம் தேவன் இயேசு கிறிஸ்துவை வேண்டிகொள்கிறேன்,
சர்வ வல்லமை உள்ள நம் தேவன் உங்களோடு இருப்பாராக
samsungg;
www.sangeethum.blogspot.com
நமது வலைப்பூவை பார்வையிட்டு வாழ்த்திய அன்பு சகோதரர் சாம் அவர்களுக்கு நன்றிகள்;
தாங்கள் நமது தளத்தையும் பார்வையிட்டு கருத்துக்களத்தில் இன்னும் பங்கேற்கவும் அநேகருக்கு அறிமுகப்படுத்தவும் அன்புடன் அழைக்கிறேன்;
http://chillsam.activeboard.com/
நாம் இணைந்து சர்வ வல்லவரின் பணியில் முன்னேறுவோம்..!
Post a Comment