praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Tuesday, March 17, 2009

Why dont i commit suicide..?

இன்று காலை எனக்கு ஒரு யோசனை;

"தற்கொலை செய்து கொண்டால் என்ன‌?"
http://www.youtube.com/watch?v=1y5I6FO-ttM
http://christianchat.com/showthread.php?t=723
அடடே ரொம்ப பயந்துடாதீங்க,வித்தியாசமா எதாவது செய்து நாம் சாதிக்கவேண்டுமே என்ற மனப்பாரத்தினால் வந்த யோசனைதான் அது!

அதாவது நான் 'தற்கொலை செய்து கொள்ளலாமா' என அநேகரைப் போல அநேகந்தரம் யோசித்திருந்தாலும் இன்றைக்கு காலையில் அது போன்ற எண்ணத்தில் தவிப்பவருக்கு எதாவது செய்து சமூகப் பணியாற்றினால் என்ன என்ற யோசனைதான் அது!

தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது?
யார் யாருக்கெல்லாம் வருகிறது?
எப்போது வருகிறது?
தற்கொலை எண்ணத்தை நிறைவேற்றியவர் பெற்றது வெற்றியா, தோல்வியா? அல்லது
தற்கொலை எண்ணத்தை மேற்கொண்டவர் அடைந்தது வெற்றியா, தோல்வியா?
தற்கொலை செய்து கொள்ளப்போய் உயிர் பிழைத்தவரின் தற்போதய மனநிலை என்ன?
அவர் உயிர் பிழைத்ததைக் குறித்து சந்தோஷப்பட்டால் அது போன்ற எண்ணத்தில் தவிப்பவருக்காக எதாவது செய்திருக்கிறாரா?
உங்களுக்கு அருமையானவர்களை நண்பர்களை இதுபோன்று இழந்த அனுபவங்கள் என்ன?
இனி அதுபோன்றதொரு சம்பவம் நடைபெறாமலிருக்க‌ தங்கள் பங்கு என்ன‌?

இன்றைய பரபரப்பான உலகில் மனிதனின் ஆத்துமாவானது வறண்ட வனாந்தரத்தில் தனித்து சிக்கிக் கொண்ட குருவியினைப் போல அலறிக் கொண்டிருக்கிறது; அதனை அறிவாருமில்லை,விசாரிப்பாருமில்லை; அவ்வளவு அந்த ஜீவன் தன்னைத்தானே கூட நேசிப்பதில்லை; பிறகு பிறரை எவ்வாறு நேசிக்கும்?

குதிரை கம்பீரமாக ஓடுவது போலத் தோன்றினாலும் அது சாட்டையடிகளுக்கும் கடிவாளத்துக்கும் பயந்தே வலியுடன் ஓடுகிறது என்பர்;

தற்கொலை எண்ணம் யாருக்குத் தானில்லை, 'ஒன்னோட போராடியே என் பிராணன் போறது' எனப் புலம்புவது கூட தற்கொலை எண்ணத்தின் வெளிப்பாடுதான்! 'செத்துப்போனா தேவல' என்போரையும் நம்பமுடியாது;

இப்படி இது போன்றதொரு "மதசார்பற்ற" பிரச்சினைக்கு "மதசார்பற்ற தீர்வு" உண்டா? இது தான் எனது எண்ணம்.

தயவுசெய்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் எனும் சாதாரணமான- வழ‌க்கமான- பழகிவிட்ட தீர்வினைச் சொல்லவேண்டாம்;

காரணம்,எனக்கு மிகவும் அன்பானதொரு சகோதரி தற்கொலை செய்துகொண்டாள்; அவள் உயிர் பிரியும் வரை "ஸ்தோத்திரபலி" சொல்லிக் கொண்டிருந்தாள். இதற்காக அதை நியாயப்படுத்தவில்லை; அது சரியா தவறா என்று விவாதிப்பதும் என்னுடைய மைய நோக்கமல்ல‌.

தள நண்பர்கள் கொஞ்சம் உதவினால் என்ன?
blog is in Tamil Language (Call me@ 9710305363) email id: chillsam@rocketmail.com

No comments:

Post a Comment