praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Tuesday, March 31, 2009

மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா?
>By Dr.M.S.வசந்தகுமார்.(லண்டன்). (SELECTED)

ஜாமக்காரனின் முகவுரை

மரித்த ஆவிகளைக்குறித்து வாசகர்கள் வாசிக்குமுன் பிசாசைக்குறித்து நீங்கள் அறியவேண்டும்.
தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர். லூசிபர். இந்த பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மூலபாஷை வேதபுத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது.
முதலாம் தூதன்தான் லூசிபர்
இரண்டாம் தூதனின் பெயர் காப்பிரியேல்
மூன்றாம் தூதனின் பெயர் மிகாயேல்
லூசிபர் என்ற தூதனை ஏதேன் தோட்டத்தில் காவல்காக்க வைத்த விவரம் எசே 28:11-15ல் காணலாம். அப்போது லூசிபர் தன் உள்ளத்தில், தன்னை தேவனுக்கு சமமாக்க முயற்சித்ததையும் அது தேவனுக்கு கோபம் உண்டாக்கியதையும் ஏசா 14:11-15ல் வாசிக்கலாம். அதனால் தேவன் லூசிபர் என்ற தூதனையும் அவனோடு உள்ள தூதகணங்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார்.
துரத்திவிடப்பட்ட லூசிபர் என்ற தூதன்தான் பிசாசு அல்லது தேவனுக்கு எதிரானவன் - சத்துரு - அதர்மமூர்த்தி - எதிர்கிறிஸ்து - அந்திகிறிஸ்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் தேவன்மேல் கோபம்கொண்டு தேவன் உண்டாக்கிய மனிதர்களை தேவனிடமிருந்து பிரிக்க பல வஞ்சக ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறான். அப்படி மக்களை ஏமாற்ற செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான். செத்துப்போன ஆ(வி)த்துமாக்களின் பெயரில் ஊழியர்கள் மூலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகும்.
இப்போது தமிழ்நாட்டில் இந்த ஊழியங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் மக்கள் பயந்துக்கொண்டும், தைரியமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த கட்டுரையை எழுதியவர் லண்டனில் உள்ள வேத ஆராய்ச்சி செய்யும் Dr.M.S.வசந்தகுமார் என்பவர் ஆவார். இவர் எழுதிய இந்த மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? என்ற கட்டுரை உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இதை வெளியிடுகிறேன். இனி மற்ற விவரங்களை தொடர்ந்து வாசியுங்கள். எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய செய்தி. ஆகையால் இந்த ஆராய்ச்சி கட்டுரையை தொடர் கதையைப்போல் துண்டுதுண்டாக வெளியிடாமல் முழுமையாக நீங்கள் படித்து அறிய வேண்டும் என்பதற்காக அதிக பக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு என்று ஒதுக்கியிருக்கிறேன்.மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கமுடியுமா?
கிறிஸ்தவர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று, மரித்த மனிதர்களின் ஆவிகளைப்பற்றியதாகும். அதாவது, "மரித்த உறவினர்கள், மூதாதையர்களின் ஆவிகளினால் உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு ஆலோசனைகளும், ஆவிக்குரிய வழிநடத்துதல்களும் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்க முடியுமா?" என்பது பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியாகவே உள்ளது. சில கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள பாரம்பரிய நம்பிக்கைகளினதும் பிற மதச்சிந்தனைகளினதும் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக, மரித்தோரின் ஆவிகள் தங்களோடு தொடர்புக்கொள்வதாகவும், தங்களுக்கு மரித்தோரின் ஆவிகளின் மூலம் ஆலோசனைகளும் வழிநடத்துதல்களும் கிடைப்பதாகவும் கூறிவருகின்றனர். மரித்தோரின் ஆவிகள் தங்களுடைய வாழ்வில் அற்புதங்கள் செய்வதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்கள் மத்தியில், மரித்த பக்தர்கள் கனவில் வருவதுப்பற்றியும், நேரடியாகக் காட்சியளிப்பது பற்றியும், அவர்கள் உயிரோடிருப்பவர்களுக்குப் பலதரப்பட்ட ஆசீர்வாதங்களையும், ஆலோசனைகளையும் அருள்வதைப் பற்றியும் பலவிதமான பாரம்பரியக் கதைகளும் உள்ளன. எனவே, மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியுமா? என்பதற்கும், அவைகளினால் உயிரோடிருப்பவர்களுக்கு நன்மையளிக்க முடியுமா? என்பதற்கும் வேதாகமத்தில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்துப்பார்க்க வேண்டியது அவசியமாயுள்ளது.
கிறிஸ்தவ உபதேசங்கள், நம்பிக்கைகள், நடத்தை முறைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது தேவனுடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமமே! எனவே, வேதாகமத்திற்கு முரணான எந்த ஒரு நம்பிக்கையும் உபதேசமும், நம்பகமானதும், சரியானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. நாம் சகல உபதேசங்களையும், நமக்கு கொடுக்கப்படுகின்ற ஆலோசனைகளையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது வேதாகமம் நமக்கு கொடுத்துள்ள ஒரு முக்கியமான கட்டளையாகும். இதனால்தான் "பிரியமானவர்களே, உலகத்திலே அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1யோவா 4:1) என்று அறிவுறுத்தும் வேதாகமம், சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிதானிக்கப் படவேண்டும் என்றும் கூறுகிறது (1கொரி 14:29). எனவே தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்டு தீர்க்கதரிசனங்களைச் சோதித்துப் பார்த்து நலமானதை ஏற்றுக்கொள்ளவும் பொல்லாங்காய்த் தோன்றுகிறவைகளை நிராகரிக்கவும் நாம் அறிந்திருக்கவேண்டும் (1தெச 5:20,22). இத்தகைய தன்மை ஒருவனுக்கு இல்லாதிருந்தால், அவனுடைய கிறிஸ்தவ விசுவாசம் உண்மையானதாக இராது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவிக்குரிய நிஜத்தையும் போலியையும் வேறு பிரித்து அறியக்கூடிய ஆற்றுலுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆவிகளை சோதித்தறியும்படி வேதாகமம் கட்டளையிட்டுள்ளது. உண்மையில், இத்தகைய மனிதர்களே மெய்யான கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.இதனால்தான், பிரசங்கிக்கப்பட்ட தேவ வசனத்தை மனோவாஞ்சையாய் ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தவர்கள் நற்குணசாலிகளாக இருந்தார்கள் என்பதை அப்போஸ்தலர் 17:11 அறியத்தருகின்றது. இவ்வசனத்தில் "ஆராய்ந்து பார்த்தல்" என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், நீதிபதி வழக்கை விசாரித்து உண்மையைக் கண்டறிவதைக் குறிப்பிடும் சொல்லாக உள்ளது. எனவே, ஒரு நீதிபதியைப்போல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின்மூலம், மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கவும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் முடியுமா? என்று இந்நூலில் ஆராய்ந்து பார்ப்போம்.
http://www.jamakaran.com/tam/2009/february/aavi.htm

Monday, March 30, 2009

Satan Loves You..!

கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு சாத்தானின் கடிதம்

அனுப்புநர்: சாத்தான்
அக்கினி வாசல்
எரிநரகம் 666

பெறுநர்
விசுவாசி,
மாயமாலக்கோட்டை
சிற்றின்பசாலை
பூலோகம்

அன்பான மகனே, மகளே.,
உனக்குள் என் ராஜ்யத்தை ஸ்தாபிப்பது மிகவும் கடினம் என்று எண்ணினேன். ஆனால் என் வேலையை நீ மிக சுல‌பமாக்கினாய், அதிகாலையில் எழுந்தவுடன் முழ‌ங்காற்படியிட்டு ஜெபிக்கவேண்டிய நீ ஜெபிக்காமலேயே அன்றாட கடமைகளை செய்யத் துவங்கினாய்.

முதலில் எனக்கு ஏற்பட்ட இந்த வெற்றி என்னுடைய பல வெற்றிகளுக்கு வித்திட்டதை எண்ணினால், எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா வெரிகுட் கீப் இட் அப்..!

சாப்பிடுவதற்கு முன் ந‌ன்றி ஜெபம், வேலைக்கு கிளம்புவதற்கு முன் பாதுகாப்பு ஜெபம்...இப்படி ஏதாவது செய்துவிடுவாயோ என பயந்திருந்தேன். ஆனால் நீயோ அடுத்தடுத்து செய்யவேண்டிய வேலைகளை நினைத்தபடி பிஸியாக இருந்தாய். தேவனிடத்தில் ந‌ன்றியில்லாத உன் இருதய‌மும் எளிதில் ப‌த‌ற்ற‌ம‌டைகிற‌ குண‌மும் தான் உன்னிட‌த்தில் எனக்கு மிகவும் பிடிக்கும்! ஏய்! நீ தான் எனக்குக் கிடைத்த முத்தான சொத்து!

பல ப‌ரிசுத்த ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துக் கொண்டு,எத்தனையோ புத்தகங்களை வாசித்து ந‌ல்ல கருத்துகளை தெரிந்துகொண்டும் மாற்ற -மில்லாமல் நீ தொடருகிறாயே, அது தான் என்னை மிகவும் கவர்ந்த குணம். நீ நரகத்துக்கு வந்த பிற‌கு நாம் இருவ‌ரும் சேர்ந்து வாழுவதை விட,பூமியில் சேர்ந்திருக்கிறோமே என்னை பூரிப்பாக்குகிற உண்மை இது.

நான் இருக்கிற இடத்திலே உன்னை சேர்ப்பதற்கு நான் எடுக்கிற எல்லா நடவடிக்கைகளும் உன் விஷயத்தில் வெற்றியாய் அமைவதை நினைத்தால் என் இருதயம் இன்பத்தால் நிரம்பி வழிகிறது தெரியுமா? டிவியில் வருகிற தொடர் நாடகங்கள் பார்ப்பது, அவ்வப்போது சினிமா நிகழ்ச்சிகளை ரசிப்பது, மற்றவர்களைப் பற்றி தர‌க்குறைவான வார்த்தைகளை தாராளமாய் பேசுவது, உன் தலைமை அதிகாரியை மதிக்காமல் ந‌டப்பது போன்ற‌வை எல்லாம் என்னுடைய சிறப்பான ஆற்றலால் உனக்குள் நான் புகுத்திய காரியங்கள் என்பது மட்டும் என‌க்கு மகிழ்ச்சி அல்ல,இத்தனையும் செய்துங்கூட "கிறிஸ்தவன்" என்ற போர்வைக்குள் நீ மறைந்திருக்கிறாயே அதுதான் விசேஷம்!

ஆனால் எனக்கு ஒரே வருத்தம் என்னன்னா...நீ உலக வாழ்க்கையை முடித்து என்னிடம் நிரந்தரமாய் வந்தவுடன் உன்னை சந்தோஷமாய் வைக்கமுடியாதது தான். நான் இருக்கிற இடமே அக்கினிக் கடல் தானே. அதனால் தான் உன்னை இப்பவே சிற்றின்ப சாலையில் வைத்து சந்தோஷப்படுத்துகிறேன். கிடைக்கிற சான்ஸை விட்டுவிடாதே! அனுபவி நன்றாக அனுபவி..!

மரணத்திற்கு பின்னிருக்கிற நித்திய பரலோக வாழ்வைக் குறித்து எடுத்துக் கூறி, யாராவது உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என முன்பு நான் பயந்தது உண்டு. ஆகவே தான் நீ என்னுடைய ஆள் என்று வெளியே பிரபலமாகாதபடிக்கு உன்னை வெளிப்படையான கிறிஸ்த‌வ‌ நடைமுறைக‌ளை‌ப் பின்ப‌ற்றச் செய்தேன்.

பாவ‌ப் ப‌ழ‌க்க‌ங்களைத் தொட‌ர்ந்து பின்ப‌ற்றிய‌தால் நீ என்னிட‌ம் நிர‌ந்த‌ர‌மாய் வ‌ந்து சேருகிற‌ நாள் ச‌மீப‌மாகிவிட்ட‌து. நீ என்னிட‌ம் வ‌ந்துவிட்டால் பூமியில் என் ப‌க்க‌மிருந்து செய‌ல்ப‌ட‌ ஆள் தேவைப்ப‌டும்.

ஆக‌வே இன்னும் நீண்ட‌ நாள் வாழ‌விருக்கிற‌ சிறுபிள்ளைக‌ளுக்குள்ளும் இளைஞ‌ர்க‌ளுக்குள்ளும் கெட்ட‌ சுபாவ‌ங்க‌ள் ப‌தியும்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு முன்பாக‌ கோப‌ப்ப‌டுகிறாய்,கீழ்த்த‌ர‌மான‌ வார்த்தைக‌ளைப் பேசுகிறாய், ச‌ண்டையிடுகிறாய்,இன்னும் ப‌ல‌ தீய‌ செய‌ல்க‌ளில் ஈடுப‌டுகிறாய். இப்ப‌டியெல்லாம் நீ செய்வ‌தால் அவ‌ர்க‌ளும் என் ப‌க்க‌ம் வ‌ந்துவிடுவார்க‌ள்.

அதும‌ட்டும‌ல்ல‌ என்னிட‌ம் வ‌ருகிற‌ பிள்ளைக‌ள் த‌ங்க‌ள் இள ர‌த்தத்தின் வ‌லிமையால் மேலும் ப‌ல‌ரையும் என் ப‌ணியில் இணைத்து விடுவார்க‌ள். உன்னைக் குறித்து என் எதிர்பார்ப்பு இதுதான். ப்ளீஸ்...என‌க்காக‌ இதெல்லாம் செய்ய‌க்கூடாதா என்ன‌..?

நான் எத்த‌னை முறை உன்னைக் காப்பாற்றியிருக்கிறேன், நீ பொய் சொல்லி, திருடி மாட்டிக் கொள்ள‌ வேண்டிய‌ இட‌த்தில்,உண்மையாய் வாழுகிற‌ வேறொருவரை மாட்டிவிட்டு உன்னைத் தப்புவித்திருக்கிறேன் அல்லவா?அதையெல்லாம் நினைத்துப் பார்த்து என‌க்கு நீ க‌ட்டாய‌‌ம் இந்த‌ உத‌வியைச் செய்! என் ச‌ந்தோஷ‌த்தை பரிபூர‌ண‌மாக்கு. ந‌ர‌க‌த்தினை உன் போன்றோரால் நிர‌ப்புகிற‌ என் ப‌ணி ந‌லிவின்றி தொட‌ர‌ உன் த‌ய‌வை நாடுகிறேன்.

தேங்க்யூ பை,பை,சீ,யூ..!

இப்ப‌டிக்கு,
ச‌ங்கார‌ப் ப‌ணியில்,
சாத்தான்

{நன்றி: PASTOR இறையன்பு ஜாண்}

Dr.Prakash Yesudian@ cottage Prayer

Friday, March 27, 2009

Billy GrahamFor YouFriday March 27, 2009
Can God Get Me to Stop Hating Myself?
Free Parenting Humor from the New Yorker

Can God Get Me to Stop Hating Myself? By Billy Graham, Tribune Media Services
Q: I know God is supposed to forgive us, but I did some really bad things when I was younger that constantly haunt me, and I know God will never forgive me. I don't even know why I'm writing you, but maybe you can at least help me stop hating myself so much for what I did. - R.F. A: Let me ask you a question: Does God hate you? From what you say, I think you'd probably say, "Yes, God hates me. He must hate me - because how could He do anything else after all the bad things I've done?" But you would be wrong! God hates all sin, no matter how great or small it is in our eyes. But God doesn't hate the sinner! God loves the sinner - not because of what they've done, but in spite of what they've done! The Bible says, "I have loved you with an everlasting love" (Jeremiah 31:3). This is true for you, and it is true for every person on this planet. We have a hard time believing this, I know, because we don't think this way on a human level. If someone hurts us, our natural instinct is to hate them and strike back at them. But God isn't like this. How do I know? I know it because God sent His only Son into the world to give His life for us. The Bible says, "This is love: not that we loved God, but that he loved us and sent his Son as an atoning sacrifice for our sins" (1 John 4:10). When Jesus Christ died on the cross, all your sins - even the terrible ones that haunt you - were placed on Him, and He took upon Himself the judgment you deserve. God loves you that much! Don't carry this burden any longer, but by faith open your heart to Christ and receive Him into your life today. ======== Send your queries to "My Answer," c/o Billy Graham, Billy Graham Evangelistic Association, 1 Billy Graham Parkway, Charlotte, N.C., 28201; call 1-(877) 2-GRAHAM, or visit the Web site for the Billy Graham Evangelistic Association: www.billygraham.org. (c)2008 BILLY GRAHAM DISTRIBUTED BY TRIBUNE MEDIA SERVICES, INC.Read more about By Billy Graham, Tribune Media Services at ArcaMax.com.

Tuesday, March 17, 2009

Why dont i commit suicide..?

இன்று காலை எனக்கு ஒரு யோசனை;

"தற்கொலை செய்து கொண்டால் என்ன‌?"
http://www.youtube.com/watch?v=1y5I6FO-ttM
http://christianchat.com/showthread.php?t=723
அடடே ரொம்ப பயந்துடாதீங்க,வித்தியாசமா எதாவது செய்து நாம் சாதிக்கவேண்டுமே என்ற மனப்பாரத்தினால் வந்த யோசனைதான் அது!

அதாவது நான் 'தற்கொலை செய்து கொள்ளலாமா' என அநேகரைப் போல அநேகந்தரம் யோசித்திருந்தாலும் இன்றைக்கு காலையில் அது போன்ற எண்ணத்தில் தவிப்பவருக்கு எதாவது செய்து சமூகப் பணியாற்றினால் என்ன என்ற யோசனைதான் அது!

தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது?
யார் யாருக்கெல்லாம் வருகிறது?
எப்போது வருகிறது?
தற்கொலை எண்ணத்தை நிறைவேற்றியவர் பெற்றது வெற்றியா, தோல்வியா? அல்லது
தற்கொலை எண்ணத்தை மேற்கொண்டவர் அடைந்தது வெற்றியா, தோல்வியா?
தற்கொலை செய்து கொள்ளப்போய் உயிர் பிழைத்தவரின் தற்போதய மனநிலை என்ன?
அவர் உயிர் பிழைத்ததைக் குறித்து சந்தோஷப்பட்டால் அது போன்ற எண்ணத்தில் தவிப்பவருக்காக எதாவது செய்திருக்கிறாரா?
உங்களுக்கு அருமையானவர்களை நண்பர்களை இதுபோன்று இழந்த அனுபவங்கள் என்ன?
இனி அதுபோன்றதொரு சம்பவம் நடைபெறாமலிருக்க‌ தங்கள் பங்கு என்ன‌?

இன்றைய பரபரப்பான உலகில் மனிதனின் ஆத்துமாவானது வறண்ட வனாந்தரத்தில் தனித்து சிக்கிக் கொண்ட குருவியினைப் போல அலறிக் கொண்டிருக்கிறது; அதனை அறிவாருமில்லை,விசாரிப்பாருமில்லை; அவ்வளவு அந்த ஜீவன் தன்னைத்தானே கூட நேசிப்பதில்லை; பிறகு பிறரை எவ்வாறு நேசிக்கும்?

குதிரை கம்பீரமாக ஓடுவது போலத் தோன்றினாலும் அது சாட்டையடிகளுக்கும் கடிவாளத்துக்கும் பயந்தே வலியுடன் ஓடுகிறது என்பர்;

தற்கொலை எண்ணம் யாருக்குத் தானில்லை, 'ஒன்னோட போராடியே என் பிராணன் போறது' எனப் புலம்புவது கூட தற்கொலை எண்ணத்தின் வெளிப்பாடுதான்! 'செத்துப்போனா தேவல' என்போரையும் நம்பமுடியாது;

இப்படி இது போன்றதொரு "மதசார்பற்ற" பிரச்சினைக்கு "மதசார்பற்ற தீர்வு" உண்டா? இது தான் எனது எண்ணம்.

தயவுசெய்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும் எனும் சாதாரணமான- வழ‌க்கமான- பழகிவிட்ட தீர்வினைச் சொல்லவேண்டாம்;

காரணம்,எனக்கு மிகவும் அன்பானதொரு சகோதரி தற்கொலை செய்துகொண்டாள்; அவள் உயிர் பிரியும் வரை "ஸ்தோத்திரபலி" சொல்லிக் கொண்டிருந்தாள். இதற்காக அதை நியாயப்படுத்தவில்லை; அது சரியா தவறா என்று விவாதிப்பதும் என்னுடைய மைய நோக்கமல்ல‌.

தள நண்பர்கள் கொஞ்சம் உதவினால் என்ன?
blog is in Tamil Language (Call me@ 9710305363) email id: chillsam@rocketmail.com