praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, June 23, 2010

விழாமலிருக்க விழா எடுத்தோம் எம் மொழிக்கு..!







விழாமலிருக்க விழா எடுத்தோம் எம் மொழிக்கு..!

 Bharani%20Deepam%20057.jpg

மொழி எனது அடையாளம்
மொழி எனது ஆதாரம் 

மொழி எனது இன்பம்
மொழி என்னை ஈன்றது 

மொழி எனக்கு உறவைத் தந்தது
மொழி என்னை ஊட்டி வளர்த்தது

மொழி என்னை எழுப்பியது
மொழி என்னை ஏற்றிவிட்டது 
மொழி எனக்கு ஐக்கியத்தைத் தந்தது
மொழி என் வாழ்வில் ஒளியேற்றியது 
மொழி என் எதிரிகளை ஓட்டியது
மொழி என்னை எஃகாக்கியது

Tuesday, June 22, 2010

"யௌவன ஜனம்" தளத்தின் அறிவிப்பு..!

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி:

இன்று (22.06.2010) முதல் பரிசோதனை முயற்சியாக நமது தளத்தில் யார் வேண்டுமானாலும் (anonymously) உள்ளே நுழையவும் (no logins) தங்கள் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்பைத் தருகிறோம்;
வாசகர் விரும்பினால் பெயரை வெளியிடலாம்,உறுப்பினராகலாம்.

வாசக நண்பர்கள் இந்த சுதந்தரத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36643961

Saturday, June 19, 2010

இறைவனுக்கு உருவமுண்டா..?

இயேசுவானவரின் படத்தையும் அன்னை மரியாளையும் இன்னும் பிற புனிதர்களின் படத்தையும் தொழுவோருக்கும் மெய்க் கிறித்தவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை; அதனை எங்குமே வேதம் கட்டளையாகப் போதிக்கவில்லை என்பதே மறுக்க இயலாத கூற்றாகும்;

அதுபோல படங்களையும் சிலைகளையும் தொழுவோர் பாபிலோனிய அல்லது இந்திய பாரம்பரியத் தொடர்பிலான மார்க்க பின்னணியிலிருந்து வந்தோர் மட்டுமே;

அந்த தொகையானது மிகப் பிரம்மாண்டமாக இருப்பினும் சிறுமந்தையான வேதவழி நிற்போர் அஞ்சவேண்டிய அவசியமில்லை;



Contd@
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36601563

மக்கள் டிவியில் ஆழமான நம்பிக்கை..!

பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் ‘ஆழமாக நம்புவது’ என்பது சரியான சொல்லாட்சியல்ல, என்று கூறியபோது எனக்குத் தோன்றியது…
அவர்  ‘ மேலோட்டமாக ‘ எதையோ கூறுகிறாரோ என்பதே;
ஆம், ‘ ஆழமாக ‘ என்பதன் எதிர்ச் சொல் ‘ மேலோட்டமாக ‘ என்று இருக்குமானால் ஒரு குறிப்பிட்ட காரியத்தின் மீதான நம்பிக்கை  ‘ஆழமாக ‘ இருப்பதுதானே சரியானதாக இருக்கும்?
....
ஆம், ‘நம்பிக்கை ‘ எனும் துளிரானது ‘அன்பு ‘ எனும் வேரில் ஊன்றப்பட்டு அது ‘ஆழமாக ‘ ஊடுறுவியிருக்குமானால் நாம் ‘இலக்கை அடைவோம் ‘ என்பதில் ‘ஆழமான நம்பிக்கை ‘க் கொள்வதில் தவறென்ன..?

ஓசூரில் இந்து வெறியர்கள் அட்டகாசம்..!

ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்....

Monday, June 14, 2010

மத போதனைகளை செய்யக் கூடாது:நித்தி'க்கு கோர்ட் கண்டிப்பு..!

 நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாமியார் நித்தி' ஜாமீனில் விடுதலையாகி வெளிவந்துள்ள நிலையில், தனது பிடுதி ஆசிரமத்தில் மன சுத்தி யாகத்தை நடத்தவுள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றம் நித்தி'க்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலையாகி வெளியே வந்தார். 

மத போதனைகளை செய்யக் கூடாது, 15 நாட்களுக்கு ஒருமுறை பிடுதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும், ராம்நகர் மாவட்ட கோர்ட் எல்லைக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.

தன் மீது சுமத்தப்பட்ட அவதூறு களங்கத்தை (..?) போக்குவதற்காக, அக்னி நடுவே சாமியார் நித்யானந்தா இரண்டு மணி நேரம் "பஞ்ச தபசு' பூஜை நடத்தினார்.

ராம்நகர் சிறையிலிருந்து 44 நாட்கள் கழித்து வெளியே வந்த நித்யானந்தாவுக்கு நேற்று முன்தினம், கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள மூலஸ்தானத்திற்கு சென்று அவரே பூஜை நடத்தினார்.

நேற்று காலை 6:30 மணிக்கு தனது அறையை விட்டு வெளியே வந்த நித்யானந்தா, ஆசிரமத்தின் திறந்தவெளியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். அவரை சுற்றி இரண்டு அடி சுற்றளவில், சிறிய பள்ளம் தோண்டி, அதில் சிறிய விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு நெய், எண்ணெய் ஊற்றி தீயிடப்பட்டது. தொடர்ந்து காலை 8.30 மணி வரை, நெருப்பில் நெய், எண்ணெய் விடப்பட்டு வந்தது. தீ அணையாமல் பக்தர்கள் கவனித்து வந்தனர். இதற்கு "பஞ்ச தபசு' பூஜை என கூறப்பட்டது.

இதயத்தை சுத்தமாக்க செய்யும் யாகமே "பஞ்சாக்னி தபஸ்' யாகமாகும். இதன் மூலம் ஆன்மிக நடவடிக்கைகளில் மிகவும் ஆழமான நடைமுறையை மேற்கொள்வதாகும்.

நித்யானந்தா தன் மீதான எதிர்மறையான நோக்கம் அனைத்திலிருந்தும் விடுபடுவதற்கென்றே இந்த தபசு நடத்தினார். உலக சமாதானத்தை தனது முதல் நோக்கமாக நித்யானந்தா கொண்டுள்ளார் என்று அவரது சீடர்கள் கருதுகின்றனர்.இந்த தபசில், நித்யானந்தா மட்டுமின்றி அவரைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர். சாமியார் நித்யானந்தா வழக்கம் போல் காவி உடை அணிந்திருந்தார். அவரது பக்தர்கள் சிலர் காவி உடையும், சிலர் வெள்ளை உடையும் அணிந்து கலந்து கொண்டனர்.சில மாதங்களாக பத்திரிகையாளர்களை ஆசிரமத்துக்குள் அனுமதிக்காத ஆசிரம நிர்வாகிகள், நேற்று நடந்த பூஜைக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். ஆனால், பொதுமக்களை அனுமதிக்கவில்லை.

பிடதி ஆசிரமத்தில் பக்தானந்தா, நித்ய பியானந்தா, நித்ய சதானந்தா ஆகியோர் கூறுகையில், ""இது ஆசிரமத்திற்கும், நித்யானந்தாவிற்கும் சோதனைக் காலம். இதிலிருந்து விரைவில் மீள்வோம். தடைபட்டு இருந்த சமூக நலப்பணிகள் தொடரும். அதே நேரம், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கடைபிடிப்போம். நீதிமன்றம் நிபந்தனை விதித்திருப்பதால் நித்யானந்தா ஆன்மிக பிரசாரம் மேற்கொள்ள மாட்டார்,'' என்றனர்.நேற்று காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை "தபசு' நடப்பதாக கூறப்பட்டது. 

ஆனால், இரண்டு மணி நேரத்தில் தபசு முடிந்து நித்யானந்தா தனது தனி அறைக்கு (தனியாகவா..?) சென்று விட்டார். 

இன்றும் இதுபோன்ற தபசு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Sunday, June 13, 2010

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே..!

// அத்திச்சூடி நூலை எழுதியவர் அவ்வையார் என்று சொல்லப்படுகிறது. இவரது உண்மையான பெயர் ஏவாள் என்பதாகும். அதன் திரிபே அவ்வை. இவர் கன்னியாகவே இருந்தார் என்ற வரலாறு உள்ளதை நாம் கவனிக்கலாம். கன்னிமரபு என்பது கிறித்தவம் அன்றி வேறென்ன? ஆகவே ஈவையார் கிபி ஒன்றாம் நூற்றாண்டுவாக்கில் மயிலையில் புனித தோமையர் நிறுவிய கன்னியர்மடத்தின் தலைவியாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் ‘எட்டேகால் லெட்சணமே எமனேறும் பரியே’ என்று ஒரு செய்யுள் எழுதியிருப்பதிலிருந்து இவருக்கு ‘விரியன்பாம்புக்குட்டிகளே’ என்றெல்லாம் முச்சந்திப்பிரசங்கம் செய்யும் திறனிருப்பதும் தெரியவருகிறது. //


Pls follow the link...

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36472285

 

Friday, June 11, 2010

இனி விவாகரத்து ஈஸி…ஹையா ஜாலி..!

இறைவன் இணைத்ததை மனிதன் பிரித்தல் கூடாது என்று விவிலியம் (Holy Bible) கூறுகிறது;
“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே, தேவன் அன்று” என்று கவிஞன் பாடினான்;
ஆனால் இன்றோ...

pls follow the link... 

http://chillsam.wordpress.com/2010/06/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9C/

காரு சாமியும் ஆசாமி காரும்..!

ஒரு ம‌னித‌ன் ப‌டைப்பில் இறைவ‌னின் ம‌க‌த்துவ‌த்தை...

Pls follow me.. 

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36424356

'புத்தரும் கிறித்தவரே' இறைவன் தளத்தின் அதிரடி..!

புத்தர் பெற்ற ஞானம் ஆண்டவரிடமே வந்தது என்பது அவருடைய யூகம்; இதற்கு ஆதரவாக பல்வேறு வேத வார்த்தைகளை அவர் இஷ்டத்துக்கு வளைப்பதுடன் நம்மையும் குற்றஞ்சாட்டும் சாத்தானின் தூதர்கள் எனக் குற்றஞ்சாட்டுகிறார்;ஆனால் அவர் இதுபோல இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்;

வேதத்தில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்படாதவற்றைக் கொண்டு புதிய கொள்கைகளை நிறுவி போலியானதொரு இணக்கத்தை உருவாக்கி அதன்மூலம் கிறித்துவுக்கு மகிமையைத் தேடுவதாகச் சொல்வது சுயமகிமையைத் தேடுவதாகவே எண்ணப்படும்;காரணம் இவை சொந்தத்திலிருந்து எடுத்துப் பேசும் பொய்கள்;



Pls follow me...


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36423392

Thursday, June 10, 2010

Friday, June 4, 2010

ஞானத்தைத் தேடி...

ஞானத்தைத் தேடினேன்,
தொலைந்தேன்; தொலைத்தேன்; 


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36278255

Thursday, June 3, 2010

உருவ வழிபாட்டை வெறுக்க...

// யூதர்கள் தங்கள் கடவுள் ஜெஹோவா என்கிறார்கள்;
இஸ்லாமியர் தங்கள் கடவுள் அல்லாஹ் என்கிறார்கள்;
கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்துவை கடவுள் என்று சொல்கிறார்கள்(சரிதானே?) இயேசு கிறிஸ்துவோ பிதா என்றும் , எலீ என்றும் அழைத்து இருக்கிறார்;இதோடு பரிசுத்த ஆவி என்பவரும் கடவுளாக சொல்லப்படுகிறார்;இப்போது பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று இருக்கிறதே;இதில் பன்மையை எப்படி உபயோகிக்காமல் இருக்க முடியும்? //

  தொடர்ந்து வாசிக்க...

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36240208

Wednesday, June 2, 2010

இந்தியா இந்து தேசமா..?

....இந்திய அடிமைகளோ தாங்கள் கத்தியின்றி இரத்தமின்றி சத்தமின்றி நடக்கும் உலகமயமாக்கும் பொருளாதார ஆக்கிரமிப்பைப் புரிந்துக்கொள்ளாமல் வெட்டப்படும் முன்பு சூடேற்றப்படும் பன்றி இதமாக சுகம் காணுவதுபோலவும் தன் இனம் அங்கே வெட்டித் தொங்கவிடப்பட்டதைக் கண்டும் அறிவில்லாமல் இங்கே புல்லை மேய்ந்துக்கொண்டிருக்கும் ஆட்டைப் போலவும் கண்மூடி கிடக்கிறது; //


தொடர்ந்து வாசிக்க...