praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, November 11, 2009

அற்புதம் என்பது மோசடியா..?

தமிழ்ஹிந்து தளத்துக்கு எனது பதில்...


படுபாவி
11 November 2009 at 1:32 am


டிடஸ்
// சகோ சாது செல்லப்பா சயனைடு விஷம் குடித்து உயிர் பிழைத்து இருந்தால், இயேசுவே உயிருள்ள தேவன் என்று பொருள்; இறந்துவிட்டால், இயேசு என்பது சும்மா ஒரு கற்பனை என்று பொருள் .. இல்லையா? இதுதான் உண்மையான ஜீவனுள்ள தேவன் என்பதற்கு நிரூபணம்; அதனால்தான் தேவனின் வாக்குப்படி சாது செல்லப்பா சயனைடு குடிக்கப்போகிறார்; ஜீவனுள்ள தேவன் தன் வாக்குறுதியை காப்பாற்றுவார் //


நண்பர் டைடஸ் அல்ல, டிடஸ் அது என்ன கண்ராவியோ இது நிச்சயமாக கிறிஸ்தவ பெயரல்ல; உங்கள் அணுகுமுறையும் கிறிஸ்தவ அணுகுமுறையல்ல; ஏனெனில் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் வேதப் பிரமாணத்துக்கு விரோதமான சவால்களை எடுத்துவிட்டு உண்மைக்கு மாறான கொள்கைகளை அறிவிக்கமாட்டீர்கள்;


இது வடிவேல் காமெடி ட்ராக் போல இருக்கிறது; “ஏண்டா,நாந்தான் செட்டில் பண்ணி அனுப்பிட்டேனே,பிறகு ஏண்டா…” என ரௌடியிடம் அடிவாங்கிவிட்டு புலம்புவாரே அது போல சாது செல்லப்பாவுக்காக நீங்கள் எதற்கு சவால் விடவேண்டும்?


நீங்கள் நம்பாத வேதத்தைக் குறித்து ஏன் கேள்வி எழுப்பவேண்டும்?


முதலில் அதனைப் படிப்பதையும் அதைக் குறித்து பேசுவதையும் நிறுத்திவிட்டு நீங்கள் நம்பும் வேதத்தின் சிறப்பைக் குறித்து மட்டும் பேசிப் பழகுங்கள்; உங்கள் அகமும் முகமும் அழகாக மாறும்; நெருப்புடன் விளையாட வேண்டாம்; யாரோ மாற்றுக் கருத்துக்கொண்ட நண்பரைத் தாக்கப் போய் அது கடவுளுக்கு எதிரான தூஷமாகி விட்டால் மெய்யாகவே அதுபோன்ற சூழ்நிலை நமக்கு வரும் போது கடவுளிடம் உதவி கேட்க நமக்கே வெட்கமாக இருக்கும்;


கப்பல் பிரயாணத்தின் போது அவசர ஆபத்துகளுக்காக “லைஃப் ஜாக்கெட்” மற்றும் விமான பயணத்தின் போது “பாராசூட்” தரப்படுகிறது; இதன் நோக்கம் எதுவோ அதுவே இயேசு பெருமானின் வாக்குறுதியின் ஆதாரம்; உங்கள் வாதத்துக்கும் மற்ற நண்பர்களின் பரியாசமான எண்ணங்களுக்கும் பொருத்தமான பதிலாக ஒரு குறிப்பிட்ட வேத பகுதியினை கவனியுங்கள்:


Mat 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.


Mat 4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.


Mat 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:


Mat 4:6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.


Mat 4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.


Mat 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:


Mat 4:9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்


Mat 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.


இது இயேசு பெருமான் இந்த பூமியில் மனுஷனாக வாழ்ந்த போது அவருக்கு நேர்ந்த அனுபவம்; அங்கே இயேசு பெருமானின் அணுகுமுறையினை தயவுசெய்து கவனியுங்கள்; அவர் சோதனைக்காரனுடைய முயற்சியினை மேற்கொண்ட விதம் மற்றும் அங்கு சொல்லப்படும் செய்தியே உங்களுக்கும் யாவருக்கும் பதிலாக இருக்கும்;


ஆம்,நாம் கடவுளை பரீட்சை பார்க்கும் வண்ணமாக எதைச் செய்தாலும் கடவுளின் உதவி நமக்குக் கிட்டாது என்பதே பால பாடமாக இருக்கட்டும்; ஆனாலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றத்தின் போதும் ஆளில்லாத சாலைகளில் நடைபெற்ற விபத்துகளின் போதும் கடவுளின் அன்பையும் அருகாமையும் ருசித்தவர்களின் அனுபவம் ஏராளமாகும்; இதில் மதமோ மார்க்கமோ வித்தியாசமே இல்லை; கடவுளைப் பொருத்தவரை நாமனைவரும் அவருடைய குழந்தைகளே..!

No comments:

Post a Comment