Reply to Tamil Hindu on "மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்"
கசப்பையும் வெறுப்பையும் உமிழ்வது போன்ற தனி மனித விமர்சனங்கள் நாம் நாகரீக சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தானா என்பதில் பிறரை ஐயம் கொள்ள வைக்கும்;
இன்றே ஏதோ ஒன்றை முடிவு செய்துவிடும் கட்டாயம் இங்கே யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன்;
பின்னர் ஏனிந்த அநாகரீகமான தனிமனித விமர்சனங்கள்?
"டேனியல் தங்கப்பா" (தகர டப்பா..?) என்பவரின் பெயரை வைத்து விமர்சிப்பதைவிட அவருடைய கருத்துக்களை விமர்சிப்பது நல்லது; அல்லது அதனைப் பதிவிட்டிருக்க வேண்டாம்; வேண்டுமென்றே கொம்பு சீவி விடுவதைப் போல இந்த தளத்தின் ஆதாரக் கொள்கைகளுக்கு எதிரான மதப் பிரச்சாரம் போன்ற மாற்றுமதக் கருத்துக்களைப் பதிவிட்டு பின்னர் அதனையே தூஷிப்பது மாபாவம்;
இங்கே "மன்னாரு" என்ற போர்வையில் ஒரு ஆள் எல்லாரையும் ஒருமையில் குறிப்பிடுவதுடன் "டேனியல் தங்கப்பாவை" உசுப்பிவிடச் சொல்லுகிறார்;
// அலோ..மச்சிங்களா! அல்லாரும் நம்மாளு டேனி பத்தி தெர்ஞ்சுகினீங்க இல்ல? சும்மா வுடாதீங்க அவுர…புட்சுக்கங்க. நல்லா உஸ்புங்க…அப்போதான் இன்னும் ஸோகா வஸனம் எய்துவாரு…நம்ம அல்லாரும் நல்லா டமாஸ் என்ஸாய் பண்னலாம். //
இது என்ன...விருந்துக்கு அழைத்து மூக்கறுப்பது போல...
இந்த தளத்தின் நிர்வாகிகள் இதையெல்லாம் விரும்பி ரசித்து திட்டம் போட்டே எல்லாவற்றையும் செய்வது போலிருக்கிறதே...
இயேசுகிறிஸ்துவை நம்புகிறவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும்
இராமனை நம்புகிறவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் வெவ்வேறு விஷ(ய)ங்களா?
எதிர் கருத்தினை முன்வைப்போரையும் அரவணைத்துக் கொ(ல்..?)ள்வதே சாமர்த்தியமாகும்;
ஆனால் இங்கே டேனியல் என்பவர் எடுத்த எடுப்பிலேயே காந்திஜியை "fraud" என்று குறிப்பிட்டதன் மூலம் தனது அறியாமையினைத் தானே வெளிப்படுத்திவிட்டார்; ஆனால் அதன் பிறகு தான் இந்துக்களிலும்கூட காந்திஜிக்கு எதிரானவர்கள் உண்டு என்ற உண்மையும் இங்கே வெளிப்பட்டது;
நான் சொல்லுகிறேன், காலமாகிவிட்ட பெரியவர்களை தூஷித்தல் பாவம்;
இதனையே எனது தாயாருக்குங்கூட அடிக்கடி சொல்வேன்;
இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியினைக் கொடுத்து இந்த உலகுக்கு அனுப்புகிறான்; அவரவர் தன் தன் காலம் முடிந்ததும் ஓய்வெடுக்கப் போகிறார்கள்; அவர்கள் இறைவனின் பணியாட்கள்; அவர்களைக் குற்றஞ்சாட்டுதல் என்பது இறைவனையே குற்றஞ்சொல்வதாகும்;
சிலர் நன்மைக்கு அடையாளமாகவும் சிலர் தீமைக்கு அடையாளமாகவும் வாழ்ந்திருப்பர்; அதாவது சிலருடைய வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மாதிரியாக இருக்கும்; சிலரது வாழ்க்கையோ எப்படி வாழக்கூடாது என்பதற்கு மாதிரியாக இருக்கும்; இதனை வைத்து யாரைக் குறித்தும் நாம் தீர்ப்பு செய்யமுடியாது; அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சத்தில் அவரவர் செயல்பட்டார்;
ஒரு சிலர் சேர்ந்து ஒரு "மகாத்மா"வைத் தராதது போலவே அவரது புகழை அழிக்கவும் முடியாது;
இங்கே மகாத்மாவை இகழ்ந்து பேசிய "டேனியல் தங்கப்பா" வைப் போன்றோர் அவரது படம் போட்ட இந்திய கரன்ஸியைப் பயன்படுத்துகிறதில்லையா?
இன்றைக்கு அனைத்து இந்திய கரன்ஸிகளிலும் அவருடைய "பொக்கை வாய்" ஜொலிக்கிறதே இது யார் மூலம் வந்த புகழ்?
இந்தியாவின் ஏதோ ஒரு மதமோ ஜாதியோ கட்சியோ முடிவெடுத்து செய்த காரியமோ?
சுதந்தர இந்தியாவின் முப்பது கோடி ஆத்துமாவிலும் ஜீவ ஜோதியாக அவர் ஆட்கொண்டாரே அந்த ஆன்ம சக்தியே அவரை "மகாத்மா"வாக்கியது; அந்த முப்பது கோடி ஆன்மாவிலிருந்து விழுந்த உதிரத் துளிகள்தானே இன்றைய நூற்றிருபது கோடி;
அப்படியானால் இன்றும் அவர் மகாத்மாவா? என்னவென்று சொல்வேன்?
அதற்கும் மேலே என்னவென்று சொல்வேன்?
அவர் தனது தாயின் முழு அனுமதி பெறாமலே மூன்று வாக்குறுதிகளை (வாக்கு உறுதியினால் குருதி சிந்தினார்..?) மட்டுமே கொடுத்து வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றார்;
ஒருவேளை வெளிநாட்டுக்குப் போகாமலிருந்தாலோ அல்லது சமூக பிரக்ஞை அவருக்கில்லாதிருந்திருந்தாலோ "நரேந்திரனை" விஞ்சிய ஆன்மீக குருவாக இருந்திருப்பார்;
நரேந்திரனுக்கும் சமூக பிரக்ஞை இருந்தது; ஆனாலும் ஆன்மீகமே அவரது உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்தது; காந்தியடிகளின் இந்த தடுமாற்றமே அவர் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது;
காந்தியடிகள் நினைத்திருந்தால் இந்தியாவை ஒரு இந்து நாடாக உருவாக்கியிருக்கலாம்; அதற்கான அனைத்து உரிமையும் வாய்ப்புகளும் அவருக்கு நிறையவே இருந்தது; ஆனாலும் அதனை அவர் செய்யாததற்குக் காரணம் என்ன என்பதே இராஜ ரகசியம்..!
https://chillsam.wordpress.com/
HTML Hit Counters
No comments:
Post a Comment