praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)

Wednesday, February 25, 2009

லெந்துகாலம்-நிழலுக்கே நிழலா..?

"லெந்து" என்பது இலத்தீன் அல்லது ஆங்கிலத்திலிருந்து மருவி வந்த சொல்லாகும்;இதற்கு துளிர் விடுதல் என்பது உடனடி பொருளாகவும் மாமிசமற்ற‌,புதிய ஆரம்பம்,பருவ மாற்றம்,துவக்கத்திலிருந்து ஆகியன இணை பொருளாகவும் உள்ளது.

லெந்து காலம் என்பது கத்தோலிக்க மார்க்கத்தாரால் உலகெங்கும் ஆசரிக்கப்படுகிறது;அவர்களிடமிருந்து பிரிந்துவந்த சீர்திருத்த சபையாரும் இந்த லெந்து காலத்தை ஆசரிக்கின்றனர்;

பெந்தெகொஸ்தெ மற்றும் அசெம்ப்ளீஸ் சபையாரோ புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையினை மட்டும் ஆசரிக்கின்றனர்;

இந்த தவக்காலம் "சாம்பல்" புதன் அன்று துவங்குவது ஆராய்ச்சிக்குரியது; புதனன்று குறிப்பாகத் துவங்குவதையும் 'சாம்பல்' எனப்படுவதையும் ஆராயும்போது பல்வேறு வரலாற்று உண்மைகளை அறியமுடிகிறது;

நாம் இந்தியராக சிலநாள் முன்புதான் "மகா சிவராத்திரி" என 'சாம்பல் திருவிழா' கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது;பெட்டியில் வைத்து சவ‌அடக்கம் செய்யும்போதும் 'சாம்பலுக்கு சாம்பலாக' எனும் சொல் குருவானவரால் தவறாது உச்சரிக்கப்படும்;தற்போது ஆவிக்குரிய சபையாரும் இதை உச்சரிக்கின்றனர்; 'திருநீறு' எனும் திருச்சாம்பலை சைவ மார்க்கத்தார் போற்றுவதையும் கவனிக்கவேண்டும்; இவற்றுக்கு நடுவே அமாவாசை தினம் வந்ததையும் கவனிக்கவேண்டும்;

எந்த ஒரு தவமும் ஒரு மண்டலம் என்பது ஐதீகம்;அதாவது அமாவாசையில் துவங்கி அமாவாசை கடந்து பௌர்ணமியில் முடிவது ஒரு மண்டலமாகும்; அது போலவே லெந்து காலம் எனும் தவக்காலமும் கண‌க்கிடப்பட்டு சரியாக பௌர்ணமி அன்று பலியுடன் நிறைவேறுவது போல அமைக்கப்பட்டுள்ளது; அதாவது ஓய்வு நாள் இறைவனுக்குரியது என்பதால் அதைத் தவிர்த்து கணக்கிட்டால் 40 நாள் என்பதாகவும் கொள்ளலாம்; இதனைத் தொடர்ந்து யூதர்களின் பஸ்கா பண்டிகை வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்; நிறைவாக "அசனம்" எனும் (சவ அடக்க ?) பலி விருந்தும் உண்டு. தவம் யாருக்காக ?எதற்காக ? எப்படி ? என்பது தனி ஆராய்ச்சியாகும்.

கிறிஸ்தவர்கள் இப்போது சொல்லட்டும்,யூதர்களின் ஆதாரப் பண்டிகையான பஸ்கா பண்டிகையே கிறிஸ்துவுக்கு நிழல்,அது கிறிஸ்துவில் நிறைவேறி ஒழிந்தது எனில் பஸ்காவுக்கு (போட்டி?) நிழலான லெந்து கால நடைமுறைகள்..? சற்று யோசிப்போமா? நிழலுக்கே நிழலா ?


[சில்ஸாமின் தனி கருத்து:- இது எனக்கு "இயேசுவை நினைத்துக் கொண்டு இராமாயணம் படி" என்பது போலிருக்கிறது..! ]

No comments:

Post a Comment