அதை இடித்தவருக்கும்...இதை இடித்தவருக்கும்..?
அது இடித்து வீழ்ந்தது,
இது இடிந்து வீழ்ந்தது;
அதை இடித்தவருக்கும்
இதை இடித்தவருக்கும்
என்ன வழக்கோ..?
இடிந்ததைக் கட்டினாலும்
இடித்தவரையறிய இயலுமா..?
இடித்தவர் இடித்ததைக் கட்ட யாரால் இயலும்..?
இனி இடிக்காமலும் இடியாமலும் கட்ட யாரால் கூடும்..?
அவர் இடிக்கவும் கட்டவும்
நாட்டவும் பிடுங்கவும் வல்லவராமே,
இடித்தவரும் இடிந்தவரும் கட்டப்பட
அவரை நாடலாமே..?
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37372630