praying for your success..!

இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)
Showing posts with label chillsam. Show all posts
Showing posts with label chillsam. Show all posts

Monday, September 13, 2010

சிறுபான்மை கல்விநிறுவனங்கள் மீது புதுவித வன்முறை..!

தமிழகஅரசு அண்மையில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் ஆணையொன்றை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பித்தது;இந்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் திடீரென அவசர கோலத்தில் இந்த ஆணையைப் பிறப்பித்ததால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தனியார் பள்ளிகள் தடுமாறிப் போயின;

நீதிபதி அவர்களின் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன;உதாரணமாக இந்த அரசின் உத்தரவை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தினாலும் அந்த கட்டணத்தைக் கட்டப்போவதென்னவோ பெற்றோர் தான்;அவர்களிடமும் விசாரணை ஆலோசனை கேட்டிருக்கவேண்டும் என்பது பெற்றோரின் ஆதங்கம்;பள்ளி நிர்வாகமும் தனது நியாயமான செலவினங்களுக்கு மாற்று உதவிகளை அரசிடம் கோருகிறது;

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே கல்வித் தொகையினை வசூலித்து பாடப்புத்தகங்களை வழங்கவேண்டிய நிலையிலிருந்த பள்ளி நிர்வாகம் நிலைமையை சமாளிக்க என்ன செய்தது? ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாஸிட் போல பெற்றோரைக் கட்ட வற்புறுத்தியது;அடுத்து பள்ளி திறந்ததும் மேலும் இன்னொரு தொகையை பள்ளிக்கட்டணம் மற்றும் நோட்டுப் புத்தகத்துக்கென மொத்தமாக வசூலித்துக் கொண்டு அதற்கு குறைவாக பில் கொடுத்தது;சரி,பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என பொறுத்துக் கொண்டு நிர்வாகம் சொன்னதையெல்லாம் பெற்றோர் செய்தனர்;அதற்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா,அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறோம்,அந்த உத்தரவு வந்ததும் மீதப் பணத்துக்கான பில் தரப்படும் என்றனர்;






http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=939&cat=32
இதனிடையே இது தொடர்பாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது;அரசாங்கம் மௌனம் சாதித்தது;அது தனது சட்டத்தை அமல்படுத்தும் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கவோ செயல்படுத்தவோ இல்லை;பாவம்,நீதிபதி கோவிந்தராஜனும் பள்ளிகளுக்கு ஊர்வலமாகச் சென்று சட்டம் அமல்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்து மீண்டும் ஒரு அறிக்கை தந்தார்;அதில் ஒரு சில பள்ளிகளின் முறைகேட்டைக் கண்டுபிடித்ததுடன்(..?!)அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் பரிந்துரைத்தார்;இப்போதும் அரசு மௌனம் சாதித்தது;அந்த பள்ளிகள் செய்தது சரி என்றும் சொல்லவில்லை,அங்கீகாரத்தை ரத்து செய்யவுமில்லை;பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டது.




இவையெல்லாவற்றுக்குமிடையே பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் சிக்கிக் கொண்டனர்; பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்குமிடையே ஏற்படும் மனக் கசப்பு மாணவர்களின் கல்வியையும் அவர்தம் எதிர்காலத்தையும் பாதிக்காதா? இதை சற்றும் உணராது அரசாங்கம் தான் அவசரகோலத்தில் பிறப்பித்த சட்டத்தை திரும்பப் பெறவும் முடியாமல் செயல்படுத்தவும் முடியாமல் 'ச்சும்மா' இருந்தால் தானாகவே எல்லாம் சரியாகிவிடுமென்ற "நரசிம்மராவ்" பாணியைக் கடைபிடித்து வருகிறது;

இந்த சூழ்நிலையினை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் சில சந்தர்ப்பவாதிகளான இந்து அடிப்படைவாதிகள் பெற்றோரைத் தூண்டிவிட்டு கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கெதிராக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்;இதனை அன்றாடம் செய்திகளை கவனித்து வருவோர் நன்கு அறிவர்;

ஆம்,இதுவரை டிவியிலும் செய்தித் தாள்களிலும் அடிபட்ட பள்ளிகளெல்லாம் கிறித்தவ பள்ளிகளாகவே இருக்கும் இரகசியமென்ன?இதில் சில இஸ்லாமிய நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிகளும் அடக்கம்;

இதனால் இந்த போராட்டக்காரர்கள் சாதிக்கப்போவதென்ன? சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அரசிடம் முறையிடாமல் பள்ளி நிர்வாகத்தை நோக்கி படையெடுத்தால் என்ன பயன் நேரும்?

ஏற்கனவே மாணவர் ஆசிரியர் இடையிலான புனிதமான உறவு கெட்டு வருகிறது;இந்த நிலையில் நிர்வாகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாக பெற்றோர் செயல்பட்டால் வளரும் இளம்தலைமுறையினரின் மனநலன் பாதிக்காதா?

அதிலும் சேவை ஒன்றையொன்றே பிரதானமாகக் கொண்டு செயல்படும் கிறித்தவ பள்ளிகள் ஏதோ முறைகேடு செய்ததைப் போலப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்தால் கிறித்தவ பள்ளிகளின் நேர்மையும் இங்கே கேள்வி குறியாகிறது;நாம் அறிந்தவரையில் அதிகக் கட்டணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது;அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை என்பதே உண்மை நிலவரமாகும்;அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்;அவை ஆராய்ந்து களையப்படவேண்டும்;இன்னும் வழக்கமாக வருடாவருடம் உயர்த்தும் கட்டணத்தைக் கூட இந்த வருடம் உயர்த்த வழியில்லாமல் பள்ளிகள் தவித்துப் போனது என்பதே உண்மை நிலை;காரியம் இப்படியிருக்க கிறித்தவ பள்ளிகள் மட்டுமே ஏதோ மோசடியில் ஈடுபடுவதைப் போல சன்டிவி போன்ற மீடியாக்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைப் போலவே தோன்றுகிறது;



இதில் இன்னொரு கொடுமையென்றவென்றால் போராட்டக்காரர்கள்
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கொடுப்பதாம்;அவர்களும் வந்து செய்தியை சேகரித்துக்கொண்டு பள்ளிநிர்வாகத்திடம் பேரம் பேசுவதாம்;இந்த செய்தியை வெளியிடாமலிருக்க எவ்வளவு தருகிறீர்கள்' என்று:அந்த அளவுக்கு பத்திரிகையாளர்களுக்கு தேசபக்தியும் மக்கள் நலனும் பொங்கிவழிகிறது;

தமிழக அரசு உடனே இப்பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்தாகவேண்டும்;மீடியாக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்க இந்த சூழ்நிலையினைப் பயன்படுத்தாமலும் மத உணர்வுகளுடன் செயல்படாமலுமிருக்க வேண்டும்;பெற்றோரும் தங்கள் நியாயமான உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மெய்யாகவே பள்ளி நிர்வாகத்தினர் அதிகக் கட்டணம் வசூலிப்பது போலிருந்தால் அரசிடமோ கோர்ட்டிலோ முறையிடலாம்; அதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியைக் காட்டாதிருக்கவேண்டும்;இத்தனை வருடம் அமைதியாக இருந்த நீங்கள் அரசின் ஒரு தவறான சட்டத்தினால் உண்டான குழப்பத்தை உணராமல் கல்வி நிறுவனங்கள் மீது உங்கள் கோபத்தைக் காட்டுவது சரியல்ல.

Friday, June 11, 2010

'புத்தரும் கிறித்தவரே' இறைவன் தளத்தின் அதிரடி..!

புத்தர் பெற்ற ஞானம் ஆண்டவரிடமே வந்தது என்பது அவருடைய யூகம்; இதற்கு ஆதரவாக பல்வேறு வேத வார்த்தைகளை அவர் இஷ்டத்துக்கு வளைப்பதுடன் நம்மையும் குற்றஞ்சாட்டும் சாத்தானின் தூதர்கள் எனக் குற்றஞ்சாட்டுகிறார்;ஆனால் அவர் இதுபோல இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்;

வேதத்தில் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்படாதவற்றைக் கொண்டு புதிய கொள்கைகளை நிறுவி போலியானதொரு இணக்கத்தை உருவாக்கி அதன்மூலம் கிறித்துவுக்கு மகிமையைத் தேடுவதாகச் சொல்வது சுயமகிமையைத் தேடுவதாகவே எண்ணப்படும்;காரணம் இவை சொந்தத்திலிருந்து எடுத்துப் பேசும் பொய்கள்;



Pls follow me...


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36423392

Thursday, December 24, 2009

விரும்பினது வாய்க்கும்..!






பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.


அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.

கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.


கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.


உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங்கீதம்.37:1-5)


மேற்காணும் சங்கீதப் பகுதியை காமராஜபுரம் ஊழியத்தில் சற்று தியானித்தேன்; முதலில் நித்திய ஜீவனைக் குறித்த ஒரு தியானத்தினை யோசித்திருந்தேன்; ஆனாலும் இதிலிருந்து முன்னுரை போல ஒரு தத்துவத்தை சொல்லிப்போக எண்ணி துவக்கினேன்; ஆனால் இதுவே தியானமாகிப் போனது; ஆவியானவருடைய சத்தத்தையும் நடத்துதலையும் கவனித்ததன் பலனை இறுதியில் உணர்ந்தேன்;


ஆம்,அந்த வீட்டின் மூத்த மகன் குமார் வேலையில்லாத துக்கத்தில் இன்று மதியம கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தபோது பிசாசு மின்விசிரியைக் காட்டி தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியிருக்கிறான்;நல்லவேளையாக அவன் கீழ்ப்படியாததால் பிசாசு இன்று தோற்றுப்போனான்;

அவனது தாயோ மகளுடைய திருமணம் தொடர்பான கடன் பிரச்சினையால் மிகவும் சோர்ந்து போயிருந்து துதிவேளையில் கைதட்ட கூட விருப்பமில்லாமலிருந்தார்களாம்;

தத்துவம்:

ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் பல்வேறு ஆசைகள் தோன்றுகிறது;அவை நிறைவேறாவிட்டால் ஏக்கமாகவும் விரக்தியாகவும் மனச்சோர்வாகவும் மாறி மனிதனை துன்புறுத்துகிறது;

ஆனால் ஆண்டவர் "இருதயத்தின் வேண்டுதல்களை" அருள் செய்வதாகக் கூறுகிறார்; "அருள் செய்வேன்" எனும் வார்த்தை இயல்பான தேவ இரக்கத்தினைக் காட்டுகிறது; தகுதியின் அடிப்படையிலல்ல; தமது அன்பின் ஆதாரத்திலிருந்து கிருபையுடன் ஆசி தரும் தேவ சிநேகம்..!

மேலும் நம்முடைய சிந்தையிலுள்ள காரியத்துக்கும் பதில் தருவதாக வாக்கு கொடுக்கிறார்; நாம் எல்லாவற்றையும் வார்த்தையினால் விளக்கிவிடமுடியாது; ஆனால் சிந்தையின் வேகம் அபாரமானது; அதனை ஒழுங்குபடுத்தினால் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் ஏராளமாக இருக்கும்.

"அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக" (சங்கீதம்.20:4)

"துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்." (நீதிமொழிகள்.10:24)

இந்த வார்த்தைகளும் மனதிலுள்ள விருப்பங்கள் ஆவியானவரால் கண்காணிக்கப்படுவதையே கூறுகிறது;

"என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்." (சங்கீதம்.139:4)

"மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." (யோவான்.2:25)

ஆம்,நம்முடைய வார்த்தைகளைவிட சிந்தையே தேவனுடைய அற்புதம் விளங்கக் காரணமாக இருக்கிறது; எனவே ஏக்கத்துக்கும் விரக்திக்கும் மனச்சோர்வுக்கும் இடந்தராமல் முதல் கட்டத்திலிருந்து அதாவது விருப்ப நிலையிலேயே காத்திருப்பதுடன் "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு" என்று வேதம் ஆலோசனை கூறுகிறது; ஆம்,மன மகிழ்ச்சி நல்ல ஔஷதம் என்றும் வேதம் கூறுகிறது; அதாவது அதுவே அருமருந்தாம்;

"பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.

அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்." என்றும் வேதம் கூறுகிறது; ஆம்,எரிச்சலும் பொறாமையும் நம்மையே நோயாளியாக்கிவிடுவதுடன் நம்து செயல்திறனையும் கெடுத்துப்போடும்;

நாம் என்ன நினைக்கிறோம்,நமக்கு தீங்கு செய்பவனை ஆண்டவர் உடனே அழித்துப்போடவேண்டும் அல்லது அவனே அழிந்து போகவேண்டும்'என்று; ஆனால் அவர்களுக்கென்று ஏகக் கால திட்டத்தினை கர்த்தர் வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோமா?

"அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு." (சங்கீதம்.37:38)

ஆனால் நாம் செய்யக்கூடியதானதொரு காரியம் தொடர்ந்து நன்மை செய்வது;

"கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்."

இதன்படி நாம் நம்முடைய மேய்ச்சலில் கவனமாக இருக்கவேண்டும்; தேவையில்லாத களைகளையும் தளைகளையும் தவிர்த்து புல்லுள்ள இடங்களில் மேய்க்கும் நல்ல மேய்ப்பனுக்கு அடங்கியிருந்து சத்தியமானதில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்; சத்தியத்துக்கு விரோதமானவற்றுடன் போராடக் கூடாது; அது நம்மை சோர்வடையவே செய்கிறது;

எல்லாவற்றுக்கும் மேலாக,"உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." என்றும் வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது;

நம்முடைய அனைத்து திட்டங்களையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு அவருடைய ஒப்புதல் கிடைக்கும் வரை நம்பிக்கையுடன் காத்திருக்கவேண்டும்;



இறுதியாக இந்த குறிப்பிட்ட வசனங்களிலிருந்து நாம் செய்யவேண்டிய மூன்று காரியங்களும் ஆண்டவர் நமக்காக செய்யும் இரண்டு காரியங்களுமாக நாம் கற்றுக் கொள்ளக்கூடியவை:



1.கர்த்தரில் நம்பிக்கை
2.கர்த்தரில் மனமகிழ்ச்சி
3.கர்த்தரில் ஒப்புவித்தல்

இவை மூன்றும் நாம் செய்யவேண்டுமாம்.


1.சிந்தைக்கும் பலன் தருவார்
2.செய்தும் தருவார்

இவையிரண்டும் கர்த்தர் நமக்காக செய்வது.



Friday, December 18, 2009

புதுவருட "வாக்குத்தத்தங்கள்" எச்சரிக்கை..!

உலக வழக்கில் சொல்கிறேன், இறைவனைப் பழிப்பவன் வாயில் "மண்ணைப் போடு" என்றானாம், ஒரு பக்தன்;அவனை விட தீவிர பக்தன் சொன்னானாம், "அந்த மண்ணும் பக்தர்களின் பதம் பட்டு புனிதமாக இருக்கும்; அதை அவன் வாயில் போடுவதால் புனிதமடைந்து அந்த பாவி கடைத்தேறிவிடுவான், அவன் நாக்கு புழுத்து போவதாக" என்று சபித்தானாம்;

கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கெட்டவர்களுண்டு; அதனைக் கேட்டு விசுவாசித்தோர் கெட்டதாக வரலாறு இல்லை; புதிய விசுவாசிகளுக்கும் வளரும் விசுவாசிகளுக்கும் ஒரு கருப்பொருளுடன் கூடிய வாக்குத்தத்தத்தை வருட ஆரம்பத்தில் தருவதில் என்ன தவறு?

ஞானமான போதகர்கள் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களிலிருந்து தீர்க்கதரிசன செய்தியை தியானித்துப் போதித்து தங்கள் சபையினை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்துவர்;

மேலும் தன்னிடம் வரும் விசுவாசிக்கு கர்த்தருடைய பீடத்திலிருக்கும் ஊழியன் அவர் சார்பான வாக்கையும் எச்சரிப்பையும் தருவது அவனது கடமையாகும்; கற்பனையான சொந்த வாக்குகளைச் சொல்வதைவிட‌ ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்குகளை நினைப்பூட்டுதலாகச் சொல்வது நன்மையே பயக்கும் என்பது எனது கருத்து.


To Be Contd...


Wednesday, December 16, 2009

எனது டைரிக் குறிப்பு:-

எனது டைரிக் குறிப்பு:  


இன்று காலை துர்காவை சந்தித்தேன்; அவள் கடந்த சில மாதத்துக்கு முன்பு தனக்காக‌ பிரார்த்தனைக்காக செய்ய என்னைத் தொடர்பு கொண்டாள்;அது ஒரு சுவாரசியமான நிகழ்வு;அதனைக் குறித்து நிறைய எழுதவேண்டும்; இன்று அவள் என்னிடம் கேட்ட கேள்வியும் அதற்கு நான் உள்ளூற தடுமாறினாலும் தடம் மாறாமல் அளித்த பதில் திருப்திகரமாக இருந்தது;  


அவள் கேட்ட கேள்வி,ஏன் கிறிஸ்தவத்தில் இத்தனை பிரிவுகள்?  


இது வழக்கமாக அனைத்து மார்க்கத்தவரும் கேட்கும் கேள்விதான்;அவர்கள் மார்க்கத்தில் எத்தனையோ பிரிவுகளிருப்பினும் கிறிஸ்தவ மார்க்கம் (மட்டுவாவது..?) பிரிவுகள் இல்லாததாக இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் காரணமாக இருக்கலாம்;  


முதலில் பொதுவானதொரு பதிலைச் சொன்னேன்; இது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயம்;இதில் எது சரி என்று எளிதாகச் சொல்லமுடியாது;ஏனெனில் ஒவ்வொன்றும் நம்பிக்கை சார்ந்த காரியம்;  


ஆனாலும் வேதம் இதற்கு தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது;வேதம் கடவுளின் தன்மையையும் அவரை அடையும் வகையையும் சொல்லித் தருகிறது;வேதம் என்பது பயின்று நிறைவேற்ற வேண்டியதாகும்; ஆனால் கடவுள் என்றதுமே தொழுகையே முதலிடம் பிடிக்கிறது;காரணம் வாழ்க்கையின் தேவைகள்;தொழுகை அவசியமானாலும் அதுவே போதுமானதல்ல;  


இதைக் குறித்த தெளிவு இல்லாததால் மனிதன் இரண்டு தவறு செய்தான்; ஒன்று, கடவுளை சிருஷ்டிகளுக்கு இணை வைத்தான்; இதனால் அவரைத் தாழ்த்தினான்; இரண்டு, எல்லாவற்றுக்கும் அதிகாரியான மனிதன் தன்னை விட தாழ்ந்த சிருஷ்டிகளை- தனக்குப் பணியாளாகக் கடவுள் சிருஷ்டித்தவற்றைப் பணிந்துக் கொண்டதால் தன்னைச் சிறுமைப்படுத்திக் கொண்டான்;  


இப்படி கடவுளையும் தாழ்த்தி தன்னையும் சிறுமைப்படுத்திக் கொண்டதால் கடவுளை அடையும் வாசல் அடைபட்டது;  


இதற்குக் காரணமாக அமைந்தது,மனிதனுக்குக் கடவுள் கொடுத்திருந்த சுயாதீனம்;இந்த சுய ஆளுமையினை தன்னாட்சியினை கடவுளுக்கு எதிர் வல்லமையிடம் இழந்ததால் அடிமைத்தனமும் பயமும் பிரிவினையும் மரணமும் வந்தது;சாவாமையுள்ள மனிதன் வாழ்வியல் அச்சங்களால் பீடிக்கப்பட்டான்;  


அடுத்த சவால் மெய்ப்பொருளை அடைய வேண்டும்; மெய்ப்பொருளான பரம்பொருளை எளிதில் அடையும் வாசல் அடைபட்டதால் மாற்றுவழியினைத் தேடும் மனிதனுக்கு முன்பாக இரண்டு கேள்வி உண்டு;  
ஒன்று கடவுளின் தன்மை என்ன? இரண்டு அவரை அடையும் வழி என்ன? அதாவது கடவுளை எப்படி புரிந்துக் கொள்ளுவது என்பதும் அவரை எப்படி அடைவது என்பதும் ஆதார நோக்கமாக இருக்கிறது;  


ஏனெனில் கடவுள் மனிதனை சிருஷ்டித்ததால் அந்த பரம்பொருளைக் குறித்த தேடலும் ஏக்கமும் ஆராய்ச்சியும் இயல்பாகவே மனிதனிடம் நிறைந்திருக்கிறது;  


ஆனாலும் எதிரியினால் திரையிடப்பட்ட‌ பிரிவினையாகிய தோஷம் நீங்காமல் பரிசுத்தமான இறைவனை அறிய முடியாது;அதற்கு ஒரு பரிகாரம் செய்தாக வேண்டும்;அந்த பரிகாரத்தை மனிதன் சார்பாக யாராவது செய்யவேண்டும்;அதனைச் செய்பவர் பாவதோஷமில்லாதவராக இருக்கவேண்டும்;  


இந்த விதிமுறையின்படி அன்புள்ள இறைவனே ஒரு ஏற்பாட்டைச் செய்தார்;தம்முடைய திரு வார்த்தையையே மனுடாவதாரத்தில் இந்த உலகுக்கு அனுப்பினார்;அவர் மூலம் பாவ மன்னிப்பாகிய மீட்பை அவருடைய மாசில்லாத இரத்தத்தின் மூலம் உண்டு பண்ண அவர் தாமே கிருபாதார பலியானார்;
 
ஆம்,ஜீவாதிபதி ஜீவனைத் தந்து நம்மை மீட்டுக்கொண்டார்; அவரே ஜீவனுக்கு அதிபதியாதலால் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார்;அவர் வழியாக பரம்பொருளை அடையும் வழி புதுப்பிக்கப்பட்டது;  


இதோ "கிறிஸ்மஸ்" எனும் பண்டிகையினைக் கொண்டாடுகிறோம்; "கிறிஸ்மஸ்" சொல்லும் சேதி என்ன,நம்மை மீட்க இறைவன் அன்புடன் அனுப்பிய கிருபாதாரபலி அவதரித்த நாள்; "அவதரித்தல்" என்னும் சொல்லே "மேலிருந்து கீழாக" என்று அர்த்தமாம்;  


ஆம்,இயேசு என்னும் இறை மைந்தன் விண்ணகத்திலிருந்து மண்ணகத்துக்கு வந்து நாம் விண்ணகம் சேரும் வழி வகையினை ஏற்படுத்தினார்,என்பதே நற்செய்தி..!  


துர்காவுக்கு எனது பதிலால் பரம திருப்தி;அதிலும் மனதால் இறைவனுடன் ஒன்றித்து இருப்பதே தியான அனுபவம்,அதுவே அனைத்து வெற்றிகளுக்கு ஆதாரம் என்று நான் சொன்னது மிகவும் சந்தோஷமாம்;  


ஏனெனில் தனியாக நேரமெடுத்து பிரார்த்தனை செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்;ஆலயத்துக்கும் செல்லமுடியாது;வீட்டிலும் பிரார்த்தனை செய்யமுடியாது;இந்த நிலையில் நான் கூறிய எளிமையான வழிமுறை துர்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


Tuesday, December 8, 2009

ஆசீர்வாதத்தின் திறவுகோல்

"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" (எசேக்கியேல்.33:24) 


வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்துள்ள நமக்கு இந்த வார்த்தை விசேஷித்த உற்சாகத்தைக் கொடுக்குமா? ஒருவேளை இதுவே வருடத்தின் ஆரம்பமாக இருந்திருக்குமானால் மிகுந்த சந்தோஷமாக இதனை வாக்குத்தத்தமாக ஏற்றுக்கொண்டிருப்போம்; இந்த வசனம் குறிப்பிட்ட பகுதியின் நடுவில் இந்த ஒரு வரி மாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது;  


எனக்கு அருமையான நண்பர்களே, நம்முடைய ஆண்டவர் உண்மையுள்ளவராக இருக்கிறார், 


" தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது " (2.நாளாகமம்.16:9) என்று நாம் வாசிக்கிறவண்ணமாக இந்த வார்த்தையானது நமது உள்ளத்தை அசைக்குமானால் நமக்கும் ஆண்டவர் தரப்போகும் வெற்றிக்காகப் பொறுமையாகக் காத்திருப்போம்;


"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" என்று வாசித்தோம்; சரி, ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக வேதம் கூறுவது என்ன‌?  


"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." (ஏசாயா.51:2 )  


இங்கே நாம் வாசிக்கிறோம், ஆபிரகாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாலேயே தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது; ஆனால் அவனது சந்ததியாரோ தேவச் செயலை மறந்து சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து தேவனைக் கோபப்படுத்தினர்; எனவே அவர்களை சத்துருக்களின் கைக்கு ஒப்புக்கொடுத்தார்; ஆனாலும் அவர்களை வெறுத்துவிடாமல் தீர்க்கர்களின் மூலம் அவர்களை உணர்த்தி நல்(தம்)வழிப்படுத்தவும் விரும்புகிறார்; இதுவே ஒரு தகப்பனின் இருதயமாகும்;  


கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதால் ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்க முடிந்தது எனில் கர்த்தர் ஆபிரகாமை ஆசீர்வதிக்கக் காரணமாக இருந்தவற்றில் அவனுடைய பங்கு என்ன என்பதையும் தியானிப்போமாக‌.  


ஏனெனில் தேசத்தை சுதந்தரிப்பது என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வார்த்தையின்படி நிலங்களையும் பொன் பொருள்களையும் சொந்தமாக்கிக் கொள்வது மட்டுமல்ல; நமக்கு சுதந்தரமான கிறிஸ்துவை இந்தியர் அனைவருக்கும் சுதந்தரமாக்குவதே மெய்யான சுதந்தரமாகும்;  


எனவே இந்த சுதந்தர உணர்வு சாதித்த உணர்வாக ருசிக்கப்பட வேண்டுமானால் ஆபிரகாமின் வெற்றியிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்;ஆபிரகாமின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது என்ன என்று தியானிப்போமா?  


1. விசுவாசம்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்தது,அவனிடம் காணப்பட்ட விசுவாசமே என்றால் அது மிகையல்ல;எனவே வேதம் சொல்லுகிறது,

"அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்." (கலாத்தியர்.3:9)

விசுவாசம் சோதனையில்லாமல் பூரணப்படாது வேதத்தின் விதியாகும்; நம்மைக் காக்கும் விசுவாசத்தை நாம் காத்துக்கொள்ளவேண்டும்; ஆபிரகாமின் உச்சக்கட்ட விசுவாசத்தை எங்கே காண்கிறோம்; அது அவன் தனது சேஷ்டபுத்திரனும் ஏக சுதனுமாகிய பலியாக ஒப்புக்கொடுத்த இடத்திலே வெளிப்பட்டது; 


தனக்கு ஒரு பிள்ளையைத் தருவதாக வாக்களித்த தேவன் அதையும் அவனது முதிர்வயதில் கொடுத்தபோது அவன் அடைந்த சந்தோஷத்தை முற்றிலும் மாற்றிப்போடும் வகையில் அந்த பிள்ளையையே பலியாக ஆண்டவர் கேட்பாரானால் எவ்வளவு இக்கட்டான நிலை? ஆனாலும் அந்த சூழ்நிலையை மேற்கொள்ள அவனால் முடிந்தது;


தன் பிள்ளையை வெட்ட அவன் தனது கையை ஓங்கியபோது அவனது மனம் எப்படி துடித்திருக்கும்? ஏனெனில் இராஜாவான சாலமோனுடைய நாட்களில் அவனிடம் ஒரு விசித்திர வழக்கு வந்தது; இரு தாய்மார் ஒரு பிள்ளைக்கு சொந்தங்கொண்டாடினார்கள்; சாலமோனோ உண்மையான தாயைக் கண்டுபிடிக்க வேண்டி ஒரு காரியம் சொன்னான், அந்த குழந்தையை இரண்டாகப் பிளந்து இரு தாய்மாருக்கும் ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிடச் சொன்னான்; வேதம் சொல்லுகிறது,  


"அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; " (1.இராஜாக்கள்.3:26 )  


ஆம், தன் பிள்ளையை இரண்டாக வெட்டப்போவதையறிந்ததும் அந்த உண்மையான தாயின் குடல் துடித்ததாம்; அது போலவே ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியிட கையை உயர்த்திய போது அவனது இருத‌யம் துடித்திருக்கும்; ஆனாலும் ஆண்டவர் மீதான‌ தனது விசுவாசத்தை நிரூபிப்பதிலேயே அவன் கவனம் முழுவதும் இருந்தது; அதனாலேயே ஆபிரகாம் நீதிமான் என்று எண்ணப்பட்டான்; தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டான்.  


2.வாக்குத்தத்தம்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த இரண்டாவது காரியம், ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தை உறுதியாக நம்பியது; வேதம் சொல்லுகிறது,  


"மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்."(எபிரெயர்.11:17,18,19)  


எந்த சூழ்நிலையிலிருந்து ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பினான்? வேதம் சொல்லுகிறது,  


"இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப்பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்." (அப்போஸ்தலர்.7:5)


நம்புவதற்கும் விசுவாசிப்பதற்கும் காத்திருப்பதற்கும் ஏதுவில்லாதிருந்த சூழ்நிலையிலேயே ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பினான் என்றும் வேதம் சொல்லுகிறது; ஒரு அடி நிலமும் இல்லாத நிலையில் தேசத்தையே சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று ஆண்டவர் சொன்னதை நம்பினான்;  


எனக்கு அருமையான நண்பர்களே இன்றைக்கு நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் ஒரு அடி நிலமும் ஒரு காசும் இல்லாத நிலையில் இந்த வாக்கு உங்களை நோக்கி வருகிறது;என் தேவன் எனக்கு இதுபோல செய்ய வல்லவர் என்று நம்புவீர்களா? அவருக்காகக் காத்திருப்பீர்களா? ஆண்டவர் நிச்சயம் அற்புதம் செய்வார்;  


பவுலுடன் இரவெல்லாம் ஆண்டவர் பேசினார்,உற்சாகப்படுத்தினார்;ஆனால் காலையில் வந்த செய்தி என்ன? பவுலை கொலை செய்யாமல் உண்பதில்லை என்று யூதர்கள் சபதம் எடுத்திருந்தனர்;பவுலோ சிறிதும் கலங்கவில்லை;நாம் வாக்குத்தத்த‌த்தைப் பெற்று உற்சாகத்துடனிருக்கும் நேரமே நம்மை சஞ்சலப்படுத்தும் செய்திகள் வரும்;ஆனாலும் முன்னேறியே செல்லவேண்டும்;  


ஒரு சில சூழ்நிலைகளில் எல்லோரும் கைவிட்ட நிலையில் ஆண்டவரே தேற்றுகிறார்;யாக்கோபுடைய வாழ்க்கையில் தகப்பனால் வெறுக்கப்பட்டும் சகோதரனால் துரத்தப்பட்டும் தாயாரும் அனுப்பிவிட்ட நம்பிக்கையற்ற இரவில் வனாந்தரத்தில் தேவன் அவனை சந்தித்தார்,"நான் உன்னோடிருப்பேன்" என வாக்கு கொடுத்தார்; ஆபிரகாமும் கூட இவ்வாறே வாக்குத்தத்தங்களை விடாமல் பற்றிக் கொண்டதாலேயே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டான்;  


3.தொழுகை

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த மூன்றாவது காரியம்,அவன் தேவனைத் தொழுதுகொள்ளுபவனாக இருந்ததாகும்;வேதம் சொல்லுகிறது,  


"ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்." ( ஆதியாகமம்.21:33 )  


ஆம்.தொழுதுகொள்ளுதல் என்பது விசுவாசத்தின் ஆதாரக் கிரியையாகும்;அது அனைத்து சம்பவங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது;ஏதோ ஒன்றை செய்தலல்ல;ஆண்டவரை ஆராதிப்பது என்பது ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையின் உரிமையாகும்;அதுவே தேவனுடனுள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் கிரியையாகும்; தொழுகை என்பது என்ன? வேதம் சொல்லுகிறது,

" நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்."(சங்கீதம்.116:17)

ஆம்,தொழுகை என்பதில் முக்கிய பங்கு வகிப்பது "ஸ்தோத்திர பலி" செலுத்துவதே; தற்காலத்தில் 1000 ஸ்தோத்திர பலிகள் செலுத்துவது வழக்கமாக இருக்கிறது; அதில் 1000 ஸ்தோத்திர பலிகள் சொல்லி முடித்தபிறகு சொன்னவரின் மனநிலை எப்படியிருக்கும்?அதுபோன்ற திருப்தியுணர்வுக்காக அல்ல,உள்ளத்தில் ஆனந்தம் வந்தமரும் வரை துதிப்பதே சிறப்பானதாகும்; 


வழக்கமாக இயல்பாக ஸ்தோத்திரம் செலுத்துவதைத் தவிர சிறப்பாக ஸ்தோத்திர பலியைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் என்று சொல்லும் போது ஒரு விசேஷித்த பெலன் பெருகுவதை அனுபவிக்கமுடியும்; இதனால் பிசாசின் கட்டுகளுக்கு எதிராக ஒரு விசேஷித்த வல்லமை இறங்குவதையும் உணரமுடியும்;  


4.ஜெபம்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த நான்காவது காரியம், அவனுடைய ஜெப வாழ்க்கையாகும்; ஜெபத்தின் மேன்மையைக் குறித்த வேதத்தின் போதனைகளைக் குறித்து அதிகமாகவே அறிந்திருக்கிறோம்;வேதம் சொல்லுகிறது,  


"ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்." (ஆதியாகமம்.20:18)  


ஆபிரகாமின் ஜெப வாழ்க்கையைக் குறித்து நாம் அறிந்திருக்கக்கூடிய காரியங்களில் இது மிகவும் வித்தியாசமானதாகும்; அதாவது தன‌க்கு தீங்கு செய்த அரசக் குடும்பத்துக்காக வேண்டுதல் செய்கிறான்; கர்த்தருடைய பிள்ளைகள் ஜெபிக்கும் போது அதைக் கேட்பதற்கு ஆண்டவர் ஆவலாக இருக்கிறார்; 


இயேசுவானவர் இந்த பூமியில் வாழ்ந்தபோது அவருடைய ஜெபத்தால் வானம் திறந்ததாக வேதம் சொல்லுகிறது; ஆம்,நாமும் வேண்டிக்கொள்ளும்போது வானம் திறக்கிறது; ஜெபம் என்னும் போது யாபேஸைக் குறித்து நிச்சயம் தியானிப்போம்;யாபேஸின் ஜெபத்தில் ஒரு கவனிக்கத் தகுந்த காரியம், வேதம் சொல்லுகிறது,  


"யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்."(1.நாளாகமம். 4:10 )  


இந்த வேத வசனத்தில் யாபேஸைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு காரியம்,மீண்டும் மீண்டும் வரும் 'என்னை','என்' போன்ற வார்த்தைகள்; இது ஐந்து முறை வருகிறது; இது சுயநலம் போலத் தோன்றுகிறதல்லவா? ஆனாலும் வேதம் சொல்லுகிறது,  


"நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு." (எசேக்கியேல்.38:7 )  


ஆம்,தேவனுடைய பிள்ளைகளின் வழியாகவே நம்மைச் சார்ந்த சமூகம் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்பது தேவ சித்தமாகும்;அப்படியானால் நாமே நம்முடைய ஆசீர்வாதத்துக்காக வேண்டுதல் செய்ய
வேண்டியவர்களாக இருக்கிறோம்; அதனை அப்படியே அருளிச் செய்ய தேவன் ஆயத்தமாகவே இருக்கிறார்;  


கடந்த வருடத்தில் கர்த்தருக்குள் நித்திரையடைந்த சகோதரன் DGS.தினகரன் அவர்கள் தனது கடைசி புது வருட செய்தியில் இந்த யாபேஸின் ஜெபத்தையே போதித்து மக்களைனைவரையும் சொல்லவும் செய்தார்;மாத்திரமல்ல, 'இந்த ஜெபத்தைத் தொடர்ந்து சொல்லுங்கள், இந்த ஜெபம் உங்கள் தலையெழுத்தையே மாற்றிவிடும்' என்றாராம்; வேதம் சொல்லுகிறது, காலேபின் மகள் தன் தகப்பனை நோக்கி, "...எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்." 


ஆம்,நம்முடைய சூழ்நிலை கர்த்தர் அனுமதித்த காரியங்கள் கடினமானதாக இருப்பினும் ஆண்டவரை நோக்கி தாழ்மையுடன் வேண்டிக்கொண்டால் காரியத்தை சாதகமாக மாற்றுவார்; வறட்சியும் செழிப்பாகும்.  


5.பிரஸ்தாபித்தல்

ஆபிரகாம் தேசத்தை சுதந்தரிக்கக் காரணமாக அமைந்தது தேவனுடைய ஆசீர்வாதமெனில் அவன் ஆசீர்வதிக்கப்படக் காரணமாக அமைந்த இறுதியான ஐந்தாவது காரியம்,அவன் கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபிக்கிறவனாக இருந்தான்;வேதம் சொல்லுகிறது,  


"நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்." (ஆதியாகமம்.20:24)  


ஆபிரகாமும் கூட இவ்வாறே ஆண்டவருக்காக ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு கர்த்தருடைய நாமத்தைக் குறித்த தனது அனுபவத்துடன் கூடியதொரு பெயரை வைக்கிறான்; தனது மகனைத் தான் பலியாகக் கொடுக்காமல் மீட்டுக்கொள்ளவும் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிய திருப்தியுடன் திரும்பிச் செல்லவும் உதவி செய்த தேவனுக்கு "யெகோவா யீரே" எனப் பெய‌ரிட்டு கர்த்தர் தம்முடைய தேவைகளையெல்லாம் சந்திக்க வல்லவர் என்று அறிக்கை செய்தான்;  


"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவா-யீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது." 
(ஆதியாகமம்.22:14 )  


ஆம், கடைசி நிமிடத்தில் கூட இடைபட்டு ஆண்டவர் தமது வல்லமையினை விளங்கப்பண்ணி நம்மை சந்தோஷப்படுத்துவார்; மாத்திரமல்ல, நன்மையாகவும் முடியப்பண்ணுவார்; யோசேப்பைக் குறித்து வேதம் சொல்லுகிறது,  


"நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." (ஆதியாகமம்.50:20 )  


ஆம், நண்பர்களே நம்முடைய சூழ்நிலை எதுவாக இருப்பினும் நாம் அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபிக்கும்போது அவரும் நம்மை உயர்த்துவார் என்பது நிச்சயம்.

Wednesday, October 7, 2009

Reply to Tamil Hindu..!


Reply to Tamil Hindu on "மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்"

கசப்பையும் வெறுப்பையும் உமிழ்வது போன்ற‌ தனி மனித விமர்சனங்கள் நாம் நாகரீக சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தானா என்பதில் பிறரை ஐயம் கொள்ள வைக்கும்;

இன்றே ஏதோ ஒன்றை முடிவு செய்துவிடும் கட்டாயம் இங்கே யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன்;

பின்னர் ஏனிந்த அநாகரீகமான தனிமனித விமர்சனங்கள்?

"டேனியல் தங்கப்பா" (தகர டப்பா..?) என்பவரின் பெயரை வைத்து விமர்சிப்பதைவிட அவருடைய கருத்துக்களை விமர்சிப்பது நல்லது; அல்லது அதனைப் பதிவிட்டிருக்க வேண்டாம்; வேண்டுமென்றே கொம்பு சீவி விடுவதைப் போல இந்த தளத்தின் ஆதாரக் கொள்கைகளுக்கு எதிரான மதப் பிரச்சாரம் போன்ற மாற்றுமதக் கருத்துக்களைப் பதிவிட்டு பின்னர் அதனையே தூஷிப்பது மாபாவம்;

இங்கே "மன்னாரு" என்ற போர்வையில் ஒரு ஆள் எல்லாரையும் ஒருமையில் குறிப்பிடுவதுடன் "டேனியல் தங்கப்பாவை" உசுப்பிவிடச் சொல்லுகிறார்;

// அலோ..மச்சிங்களா! அல்லாரும் நம்மாளு டேனி பத்தி தெர்ஞ்சுகினீங்க இல்ல? சும்மா வுடாதீங்க அவுர…புட்சுக்கங்க. நல்லா உஸ்புங்க…அப்போதான் இன்னும் ஸோகா வஸனம் எய்துவாரு…நம்ம அல்லாரும் நல்லா டமாஸ் என்ஸாய் பண்னலாம். //

இது என்ன...விருந்துக்கு அழைத்து மூக்கறுப்பது போல‌...

இந்த தளத்தின் நிர்வாகிகள் இதையெல்லாம் விரும்பி ரசித்து திட்டம் போட்டே எல்லாவற்றையும் செய்வது போலிருக்கிறதே...

இயேசுகிறிஸ்துவை நம்புகிறவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும்

இராமனை நம்புகிறவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும் வெவ்வேறு விஷ(ய‌)ங்களா?

எதிர் கருத்தினை முன்வைப்போரையும் அரவணைத்துக் கொ(ல்..?)ள்வதே சாமர்த்தியமாகும்;

ஆனால் இங்கே டேனியல் என்பவர் எடுத்த எடுப்பிலேயே காந்திஜியை "fraud" என்று குறிப்பிட்டதன் மூலம் தனது அறியாமையினைத் தானே வெளிப்படுத்திவிட்டார்; ஆனால் அதன் பிறகு தான் இந்துக்களிலும்கூட காந்திஜிக்கு எதிரானவர்கள் உண்டு என்ற உண்மையும் இங்கே வெளிப்பட்டது;

நான் சொல்லுகிறேன், காலமாகிவிட்ட பெரியவர்களை தூஷித்தல் பாவம்;

இதனையே எனது தாயாருக்குங்கூட அடிக்கடி சொல்வேன்;


இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியினைக் கொடுத்து இந்த உலகுக்கு அனுப்புகிறான்; அவரவர் தன் தன் காலம் முடிந்ததும் ஓய்வெடுக்கப் போகிறார்கள்; அவர்கள் இறைவனின் பணியாட்கள்; அவர்களைக் குற்றஞ்சாட்டுதல் என்பது இறைவனையே குற்றஞ்சொல்வதாகும்;

சிலர் நன்மைக்கு அடையாளமாகவும் சிலர் தீமைக்கு அடையாளமாகவும் வாழ்ந்திருப்பர்; அதாவது சிலருடைய வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மாதிரியாக இருக்கும்; சிலரது வாழ்க்கையோ எப்படி வாழக்கூடாது என்பதற்கு மாதிரியாக இருக்கும்; இதனை வைத்து யாரைக் குறித்தும் நாம் தீர்ப்பு செய்யமுடியாது; அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சத்தில் அவரவர் செயல்பட்டார்;

ஒரு சிலர் சேர்ந்து ஒரு "மகாத்மா"வைத் தராதது போலவே அவரது புகழை அழிக்கவும் முடியாது;

இங்கே மகாத்மாவை இகழ்ந்து பேசிய "டேனியல் தங்கப்பா" வைப் போன்றோர் அவரது படம் போட்ட இந்திய கரன்ஸியைப் பயன்படுத்துகிறதில்லையா?

இன்றைக்கு அனைத்து இந்திய கரன்ஸிகளிலும் அவருடைய "பொக்கை வாய்" ஜொலிக்கிறதே இது யார் மூலம் வந்த புகழ்?

இந்தியாவின் ஏதோ ஒரு மதமோ ஜாதியோ கட்சியோ முடிவெடுத்து செய்த காரியமோ?

சுதந்தர இந்தியாவின் முப்பது கோடி ஆத்துமாவிலும் ஜீவ ஜோதியாக அவர் ஆட்கொண்டாரே அந்த ஆன்ம சக்தியே அவரை "மகாத்மா"வாக்கியது; அந்த முப்பது கோடி ஆன்மாவிலிருந்து விழுந்த உதிரத் துளிகள்தானே இன்றைய நூற்றிருபது கோடி;

அப்படியானால் இன்றும் அவர் மகாத்மாவா? என்னவென்று சொல்வேன்?

அதற்கும் மேலே என்னவென்று சொல்வேன்?

அவர் தனது தாயின் முழு அனுமதி பெறாமலே மூன்று வாக்குறுதிகளை (வாக்கு உறுதியினால் குருதி சிந்தினார்..?) மட்டுமே கொடுத்து வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றார்;

ஒருவேளை வெளிநாட்டுக்குப் போகாமலிருந்தாலோ அல்லது சமூக பிரக்ஞை அவருக்கில்லாதிருந்திருந்தாலோ "நரேந்திரனை" விஞ்சிய ஆன்மீக குருவாக இருந்திருப்பார்;

நரேந்திரனுக்கும் சமூக பிரக்ஞை இருந்தது; ஆனாலும் ஆன்மீகமே அவரது உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்தது; காந்தியடிகளின் இந்த தடுமாற்றமே அவர் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்துவிட்டது;

காந்தியடிகள் நினைத்திருந்தால் இந்தியாவை ஒரு இந்து நாடாக உருவாக்கியிருக்கலாம்; அதற்கான அனைத்து உரிமையும் வாய்ப்புகளும் அவருக்கு நிறையவே இருந்தது; ஆனாலும் அதனை அவர் செய்யாததற்குக் காரணம் என்ன என்பதே இராஜ ரகசியம்..!

https://chillsam.wordpress.com/











Free Web Counters
HTML Hit Counters

Monday, March 30, 2009