praying for your success..!
இந்த மாதத்துக்கான தியான வாக்கியம்," கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்." (2.தெசலோனிக்கேயர்.3:3)
Thursday, September 30, 2010
Sunday, September 26, 2010
Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video
ஸ்வோர்ட் ஆப் ஹானர் வென்ற திவ்யாவிற்கு பாராட்டு
Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video
Wednesday, September 22, 2010
Monday, September 20, 2010
Saturday, September 18, 2010
Friday, September 17, 2010
கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை ஆபரேஷன் :சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
நாட்டிலேயே முதல்முறையாக கர்ப்பிணிக்கு ஒரே நேரத்தில் 2 பெரிய ஆபரேஷன் செய்து சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.நாட்டிலேயே முதல்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையின்தான் இத்தகைய அரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டாக்டர் சி.வேணி, டாக்டர் அருண்குமார் கூறினர். டாக்டர்கள் சசிரேகா, வெங்கடேசன், பேராசிரியர்கள் ஸ்ரீனிவாசன், கன்னியாகுமரி உடன் இருந்தனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81404
சென்னை: இரண்டு கால்களும் செயலிழந்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு அரசு பொது மருத்துவமனையில், இரட்டை அறுவை சிகிச்சைகள் செய்து, தாய் - சேய் ஆகியோரை டாக்டர்கள் காப்பாற்றினர்.
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுகவனம். இவரது மனைவி ஈஸ்வரி (27) கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று ஈஸ்வரிக்கு முதுகு வலியும், இரண்டு கால்களும், உணர்ச்சியற்றுப் போனதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், பெரும்மந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கடந்த மாதம் 25ம் தேதி ஈஸ்வரியை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அரசு பொது மருத்துவமனையில், மூளை மற்றும் நரம்பியல் துறை தலைமை டாக்டர் அருண் குமார், ஈஸ்வரிக்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பரிசோதித்தார். அதில், ஈஸ்வரியின் தண்டுவடத்தில் ரத்தக்கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈஸ்வரி கர்ப்பிணி என்பதால் நரம்பியல் துறை டாக்டர்கள் தாய், சேய் நல மருத்துவர்களை கலந்தாலோசித்து சிகிச்சை அளித்தனர். முதலில் ஈஸ்வரிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்பட்டது. ஆண் குழந்தை எட்டு மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டதால் குழந்தை 1.8 கிலோ எடை மட்டுமே இருந்தது. அதனால் குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.
சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்ததும், அதே தினத்தில் உடனே நரம்பியல் மருத்துவர்கள் ஈஸ்வரியின் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து ரத்தக் கட்டியை எடுத்தனர். இரண்டு அறுவை சிகிச்சைகளும் இரண்டு மணி நேரம் நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வேணி கூறினார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81404
Thursday, September 16, 2010
Wednesday, September 15, 2010
பள்ளிகளுக்கு கோவிந்தராஜன் குழு விதித்த கட்டணத்துக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை:
தனியார் பள்ளிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரையடுத்து கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து தனியார் பள்ளிகளின் வசதிகளை அடிப்படையாகக்கொண்டு பள்ளிகள் மாணவர்களிடம் வசூல் செய்துகொள்ள வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை வசூல் செய்யாத பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்தால் தரமான கல்வி அளிக்க முடியாது என்றும், கட்டணத்தை உயர்த்தக்கோரியும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கோவிந்தராஜன் குழுவிடம் மேல் முறையீடு செய்தன. இந்நிலையில் இந்த ஆண்டு குறிப்பிட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி வாசுகி தமிழக அரசு நியமித்த கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை நடப்பாண்டு வசூல் செய்துகொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதனால் நடப்பு ஆண்டு ஏற்கனவே பள்ளிகள் என்ன கட்டணம் வசூல் செய்து கொண்டிருந்ததோ அதே கட்டணத்தை மாணவர்களிடம் வசூல் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
http://www.thenaali.com/newsinner.php?id=1347
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84636

புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
புறக்கணிப்பும் உதாசீனமும் தான் கிறித்தவ ஐக்கியமா?
அண்மையில் ஒரு தளத்தில் தசமபாகத்தைக் குறித்த ஒரு பரியாசக் கட்டுரை எழுப்புதல் என்ற பெயரில் வெளியானது;அதன் விவரம் இங்கே...
http://chillsam.wordpress.com/2010/09/11/tithe/
Pls follow me...
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=38233689

Monday, September 13, 2010
சிறுபான்மை கல்விநிறுவனங்கள் மீது புதுவித வன்முறை..!
தமிழகஅரசு அண்மையில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் ஆணையொன்றை நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பித்தது;இந்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் திடீரென அவசர கோலத்தில் இந்த ஆணையைப் பிறப்பித்ததால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தனியார் பள்ளிகள் தடுமாறிப் போயின;
நீதிபதி அவர்களின் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன;உதாரணமாக இந்த அரசின் உத்தரவை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தினாலும் அந்த கட்டணத்தைக் கட்டப்போவதென்னவோ பெற்றோர் தான்;அவர்களிடமும் விசாரணை ஆலோசனை கேட்டிருக்கவேண்டும் என்பது பெற்றோரின் ஆதங்கம்;பள்ளி நிர்வாகமும் தனது நியாயமான செலவினங்களுக்கு மாற்று உதவிகளை அரசிடம் கோருகிறது;
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னரே கல்வித் தொகையினை வசூலித்து பாடப்புத்தகங்களை வழங்கவேண்டிய நிலையிலிருந்த பள்ளி நிர்வாகம் நிலைமையை சமாளிக்க என்ன செய்தது? ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாஸிட் போல பெற்றோரைக் கட்ட வற்புறுத்தியது;அடுத்து பள்ளி திறந்ததும் மேலும் இன்னொரு தொகையை பள்ளிக்கட்டணம் மற்றும் நோட்டுப் புத்தகத்துக்கென மொத்தமாக வசூலித்துக் கொண்டு அதற்கு குறைவாக பில் கொடுத்தது;சரி,பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமே என பொறுத்துக் கொண்டு நிர்வாகம் சொன்னதையெல்லாம் பெற்றோர் செய்தனர்;அதற்கு என்ன காரணம் சொன்னார்கள் தெரியுமா,அரசிடம் மேல்முறையீடு செய்திருக்கிறோம்,அந்த உத்தரவு வந்ததும் மீதப் பணத்துக்கான பில் தரப்படும் என்றனர்;
http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=939&cat=32
இதனிடையே இது தொடர்பாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது;அரசாங்கம் மௌனம் சாதித்தது;அது தனது சட்டத்தை அமல்படுத்தும் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கவோ செயல்படுத்தவோ இல்லை;பாவம்,நீதிபதி கோவிந்தராஜனும் பள்ளிகளுக்கு ஊர்வலமாகச் சென்று சட்டம் அமல்படுத்தப்பட்டதா என ஆய்வு செய்து மீண்டும் ஒரு அறிக்கை தந்தார்;அதில் ஒரு சில பள்ளிகளின் முறைகேட்டைக் கண்டுபிடித்ததுடன்(..?!)அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவும் பரிந்துரைத்தார்;இப்போதும் அரசு மௌனம் சாதித்தது;அந்த பள்ளிகள் செய்தது சரி என்றும் சொல்லவில்லை,அங்கீகாரத்தை ரத்து செய்யவுமில்லை;பெரிய மனது பண்ணி மன்னித்துவிட்டது.
இவையெல்லாவற்றுக்குமிடையே பெற்றோரும் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் சிக்கிக் கொண்டனர்; பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்துக்குமிடையே ஏற்படும் மனக் கசப்பு மாணவர்களின் கல்வியையும் அவர்தம் எதிர்காலத்தையும் பாதிக்காதா? இதை சற்றும் உணராது அரசாங்கம் தான் அவசரகோலத்தில் பிறப்பித்த சட்டத்தை திரும்பப் பெறவும் முடியாமல் செயல்படுத்தவும் முடியாமல் 'ச்சும்மா' இருந்தால் தானாகவே எல்லாம் சரியாகிவிடுமென்ற "நரசிம்மராவ்" பாணியைக் கடைபிடித்து வருகிறது;
இந்த சூழ்நிலையினை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் சில சந்தர்ப்பவாதிகளான இந்து அடிப்படைவாதிகள் பெற்றோரைத் தூண்டிவிட்டு கிறித்தவ கல்வி நிறுவனங்களுக்கெதிராக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்;இதனை அன்றாடம் செய்திகளை கவனித்து வருவோர் நன்கு அறிவர்;
ஆம்,இதுவரை டிவியிலும் செய்தித் தாள்களிலும் அடிபட்ட பள்ளிகளெல்லாம் கிறித்தவ பள்ளிகளாகவே இருக்கும் இரகசியமென்ன?இதில் சில இஸ்லாமிய நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிகளும் அடக்கம்;
இதனால் இந்த போராட்டக்காரர்கள் சாதிக்கப்போவதென்ன? சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அரசிடம் முறையிடாமல் பள்ளி நிர்வாகத்தை நோக்கி படையெடுத்தால் என்ன பயன் நேரும்?
ஏற்கனவே மாணவர் ஆசிரியர் இடையிலான புனிதமான உறவு கெட்டு வருகிறது;இந்த நிலையில் நிர்வாகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாக பெற்றோர் செயல்பட்டால் வளரும் இளம்தலைமுறையினரின் மனநலன் பாதிக்காதா?
அதிலும் சேவை ஒன்றையொன்றே பிரதானமாகக் கொண்டு செயல்படும் கிறித்தவ பள்ளிகள் ஏதோ முறைகேடு செய்ததைப் போலப் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்தால் கிறித்தவ பள்ளிகளின் நேர்மையும் இங்கே கேள்வி குறியாகிறது;நாம் அறிந்தவரையில் அதிகக் கட்டணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது;அரசு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை என்பதே உண்மை நிலவரமாகும்;அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்;அவை ஆராய்ந்து களையப்படவேண்டும்;இன்னும் வழக்கமாக வருடாவருடம் உயர்த்தும் கட்டணத்தைக் கூட இந்த வருடம் உயர்த்த வழியில்லாமல் பள்ளிகள் தவித்துப் போனது என்பதே உண்மை நிலை;காரியம் இப்படியிருக்க கிறித்தவ பள்ளிகள் மட்டுமே ஏதோ மோசடியில் ஈடுபடுவதைப் போல சன்டிவி போன்ற மீடியாக்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைப் போலவே தோன்றுகிறது;
இதில் இன்னொரு கொடுமையென்றவென்றால் போராட்டக்காரர்கள்
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கொடுப்பதாம்;அவர்களும் வந்து செய்தியை சேகரித்துக்கொண்டு பள்ளிநிர்வாகத்திடம் பேரம் பேசுவதாம்;இந்த செய்தியை வெளியிடாமலிருக்க எவ்வளவு தருகிறீர்கள்' என்று:அந்த அளவுக்கு பத்திரிகையாளர்களுக்கு தேசபக்தியும் மக்கள் நலனும் பொங்கிவழிகிறது;
தமிழக அரசு உடனே இப்பிரச்சினையில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்தாகவேண்டும்;மீடியாக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்க இந்த சூழ்நிலையினைப் பயன்படுத்தாமலும் மத உணர்வுகளுடன் செயல்படாமலுமிருக்க வேண்டும்;பெற்றோரும் தங்கள் நியாயமான உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு மெய்யாகவே பள்ளி நிர்வாகத்தினர் அதிகக் கட்டணம் வசூலிப்பது போலிருந்தால் அரசிடமோ கோர்ட்டிலோ முறையிடலாம்; அதை விட்டுவிட்டு மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியைக் காட்டாதிருக்கவேண்டும்;இத்தனை வருடம் அமைதியாக இருந்த நீங்கள் அரசின் ஒரு தவறான சட்டத்தினால் உண்டான குழப்பத்தை உணராமல் கல்வி நிறுவனங்கள் மீது உங்கள் கோபத்தைக் காட்டுவது சரியல்ல.
Labels:
chillsam,
எனது டைரி,
கமிட்டி,
செய்தி,
தனியார் பள்ளிகள்,
நீதிபதி கோவிந்தராஜன்
Sunday, September 12, 2010
Saturday, September 11, 2010
Friday, September 10, 2010
Thursday, September 9, 2010
Saturday, September 4, 2010
Friday, September 3, 2010
Thursday, September 2, 2010
Subscribe to:
Posts (Atom)